இன்றைய விஞ்ஞான உலகில் உள்ளங்கைக்குள் உலகம் என்ற வார்த்தையை உண்மையாக்கும் வகையில் அலைபேசி இருந்தால் போதும், உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடன் பேசலாம் மற்றும் என்ன தகவல் வேண்டுமானாலும் பரிமாற்றி கொள்ளலாம் என்ற அளவின்றி டிஜிட்டல் மாறி வருகின்றது. அலைபேசிகளை பொறுத்தவரை ஆரம்ப காலங்களில் வெறும் தொலைபேசி அழைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இணைய பயன்பாடு அதிகரித்த பிறகு அலைபேசிகளில் வீடியோ பார்ப்பது, வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது என மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக அலைபேசிகள் மாறிவிட்டன.
டிவி பார்க்கும் பழக்கம் கூட பலருக்கும் குறைந்துவிட்டது என சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. புதிதாக திரைக்கும் வரும் திரைப்படங்கள் முதல் கிரிக்கெட் உள்ளிட்ட லைவ் டெலிகாஸ்ட்கள் வரை அலைபேசிகளிலே தற்போது பார்த்துவிட முடிகிறது. ஆகையால், இன்றைய 2 கே கிட்ஸ் இளைஞர்களில் சிலர், நினைத்தது நிறைவேறனும், தான் சொல்வதே நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வாழ்க்கையில் பொறுமை, சகிப்பு தன்மை, தோல்வியை ஏற்கும் பக்குவம், அவமானங்களை கடந்து செல்லும் தன்மை போன்ற குணங்கள் இல்லாமல் வளர்கிறார்கள். அதனால், சின்ன சின்ன தோல்விகள், பிரச்சனைகளை கூட கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள். அதனால் தவறான முடிவெடுக்கிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில், காதலி பேசாததால் வாலிபர் எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த மாதவன் மகன் அபி. இவர் கேரள மாநிலத்தில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அபி வந்துள்ளார். அபி வீட்டிற்கு வந்தது முதலே யாரிடமும் சரிவர பேசாமல் மவுனமாக இருந்து வந்திருக்கிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அபி நள்ளிரவு 12 மணிக்கு திரும்பி இருக்கிறார். அப்போது அவர் தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டு தனது அறையில் படுக்கச் சென்றுள்ளார்.
இதையடுத்து நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அறை கதவைத் திறந்து பார்த்த போது அபி இருந்த நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேச்சிப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, பேச்சிப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அபி இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், தற்போது காதலி திடீரென பேசுவதை நிறுத்தியதால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததும் தெரிய வந்தது. எனவே, காதலி பேசாததால் அவர் விபரீத முடிவெடுத்தது வாழ்க்கையை முடித்துக் கொண்டது தெரியவந்தது. காதலி பேசாததால் வாலிபர் தவறான முடிவெடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள் Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1800-891-4416 என்றும் அழைக்கலாம்). மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது). ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு. AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.