கள்ள காதலனுடன் பேசிக் கொண்டிருந்த திருநின்றவூர் நகராட்சி விசிக கவுன்சிலரை வெட்டி கொன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகர செயலாளரால் திருநின்றவூர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ். இவரது மனைவி பெயர் கோமதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 10 வருடங்களுக்கு கடந்த நிலையில் 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஸ்டீபன்ராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகர செயலாளராகவும், கோமதி, 26-வது வார்டு கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மனாகவும் பொறுப்பில் உள்ளார். மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென புயல் வீச துவங்கியது.. கடந்த சில மாதங்களாகவே கோமதியின் நடத்தையில் நிறைய மாற்றம் கணவருக்கு தென்பட்டுள்ளது.
அதாவது, கவுன்சிலர் கோமதிக்கும் ஆண் நண்பர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வருவதை ஸ்டீபன்ராஜ் கண்டுபிடித்து கோமதிக்கு ஸ்டீபன்ராஜ் புத்திமதி சொல்லி தகாத உறவை கைவிடும்படியும் எச்சரித்துள்ளார். ஆனால், ஸ்டீபன்ராஜ் சொல்வதை, கோமதி கேட்கவில்லை. இதனால் தம்பதி இடையே தகராறு வெடிக்க துவங்கியது. சம்பவத்தன்றும், கவுன்சிலர் கோமதி தன்னுடைய ஆண் நண்பருடன் நடுகுத்தகை ஜெயராம் நகர் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருப்பதாக, ஸ்டீபன்ராஜுக்கு யாரோ தகவல் கொடுத்துள்ளார்.

இதைக்கேள்விப்பட்டு ஆவேசம் அடைந்த ஸ்டீபன்ராஜ் சம்பவ இடத்திற்கே நேடியாக அரிவாளுடன் சென்றபோது அங்கே ஆண் நண்பருடன் கோமதி பேசிக் கொண்டிருந்ததை கண்டதுமே ஆத்திரத்தில் அரிவாளுடன் அவர்களிடம் ஸ்டீபன்ராஜ் சென்றார் அதற்குள் அந்த ஆண் நண்பர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடிக்க கோமதி மட்டும் சிக்கியதால், அவரை தலை, முகம், கை, கழுத்து என பல்வேறு இடங்களில் ஆவேசத்தில் வெட்டினார். இதில் கோமதியின் கை துண்டாக போய் விழு ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு கோமதி விழுந்து இறந்துவிட்டார்.
அதன்பிறகு ஸ்டீபன் ராஜ், நேராக திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஸ்டீபன்ராஜ் கைது செய்தனர்.