ஆப்கானிஸ்தான் அரசை ரஷ்யா முதல் முறையாக அங்கீகரித்து ஆப்கானிஸ்தானுக்கான தூதரை ரஷ்யா அங்கீரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா, ரஷ்யா, சீனா உள்பட பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தாலும் கூட தாலிபான்களை அமெரிக்கா உள்பட பல நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்து ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசுக்கு பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில் தான் முதல் முதலாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அதாவது சமீபத்தில் ரஷ்யாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகராக தாலிபான் அரசால் குல் ஹசன் நியமிக்கப்பட்டார். அவரை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் தாலிபான் தூதரை ரஷ்யா அங்கீகரித்தது. இந்த விழாவில் ரஷ்யாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, தாலிபான் தூதர் குல் ஹசனை சந்தித்து முறைப்படியான சான்றுகளை பெற்று கொண்டார்.
இந்த அங்கீகாரத்தை தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகத்தில் தாலிபான்களின் வெள்ளை நிற கொடி ஏற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை தாலிபான்கள் வரவற்றுள்ளன. இதுதொடர்பாக . தலிபானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி கூறுகையில், “இது நமது உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய மைல்கல்” என் தெரிவித்தார்.