கேரளா மாநிலம் மலப்புரம் அடுத்த நிலம்பூரை சேர்ந்த ஓட்டுநர் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கியும் பயனில்லை நண்பர்கள் வற்புறுத்தல் கூட்டாக வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் ரூ.10 கோடி பரிசு அடித்துள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் அடுத்த நிலம்பூரை சேர்ந்த ஓட்டுநர் பணியாற்றி வரும் விபீஸ் பள்ளியாலி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் தனது குடும்பத்துடன் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் பிக் டிக்கெட்டின் நீண்டகால பங்கேற்பாளர் மற்றும் கடந்த 15 ஆண்டுகளாக மாதந்தோறும் பிக் டிக்கெட் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் இவருக்கு ஒரு முறை கூட பரிசு கிடைத்ததில்லை. இதற்காக மனைவியிடம் திட்டு வாங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி 7-ந் தேதி கூட 1,000 திர்காமுக்கு லாட்டரி சீட்டு வாங்கினார்.
இந்நிலையில், பிப்ரவரி 28-ந் தேதி கூட்டாக சேர்ந்து லாட்டரி சீட்டு வாங்க உறவினரும் அவருடைய இரு நண்பர்களும் விபீஸ் பள்ளியாலிக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர்களிடம் நான் ஏற்கெனவே 1,000 திர்காமுக்கு லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். அவர்களின் வற்புறுத்தல் காரணமாக, 15 மில்விபீஸ் பள்ளியாலி திர்காம் பரிசுத் தொகையுள்ள லாட்டரி 394150 என்ற டிக்கெட்டை கூட்டாக வாங்கினார்.
இந்நிலையில், லாட்டரி சீட்டு நிறுவனத்திடம் இருந்து போன் வந்துள்ளது. வழக்கம் போல் லாட்டரி சீட்டு வாங்குவதற்காக அழைப்பார்கள் என விபீஸ் பள்ளியாலி நினைத்தார். ஆனால், அவர் கூட்டாக வாங்கிய லாட்டரிக்கு 25 மில்லியன் திர்காம் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்தனர். இத்தகவலை முதலில் நம்ப மறுத்த விபீஸ் தனது மனைவியிடம் தகவல் தெரிவித்து ஆன்லைனில் சரிபார்க்கச் சொன்னார். லாட்டரி சீட்டு பரிசு பெற்றவர் பட்டியலில் விபீஸ் பள்ளியாளி பெயர் இருப்பதை அவர் உறுதி செய்தார்.
நான்கு பேர் கூட்டாக சேர்ந்து அந்த லாட்டரியை வாங்கியதால், விபீஸ் பள்ளியாளிக்கு அவரது பங்காக 4 மில்லியன் திர்ஹாம் (ரூ.10 கோடி) கிடைக்கும். இந்த பரிசுத் தொகையுடன் விபீஸ் பள்ளியாளி இந்தியா திரும்பி பெங்களூருவில் படிக்கும் தனது மகள் வந்தனா பெயரில் சொத்துகள் வாங்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.