சென்னையை சேர்ந்த லட்சுமியிடம் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் டாஸ்குகளை அனுப்பி 4.5 லட்சம் பறித்த பெங்களூருவை சேர்ந்த லில்லி புஷ்பா கைது செய்யபட்டுள்ளார். வீட்டில் இருந்தே மொபைல் மற்றும் இணையத்தின் மூலம் முதலீடு இல்லாமல் தினமும் 500 ரூபாய் அல்லது அதற்கு மேலும் சம்பாதிக்க என்று விதவிதமான விளம்பரங்களை நாம் சமூக வலைத்தளங்களில் காண முடியும். எப்படி செய்யும் விளம்பரங்களை பார்த்து பணம் சம்பாதித்தவர்களை விட பல லட்சங்கள் ஏமாந்தவர்கள் தான் அதிகம்.
அப்படி ஏமாந்தவர்கள் வரிசையில் இன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் லட்சுமி என்பவர் இருக்கிறார். “ஆன்லைன் மூலம் டாஸ்கு” அதாவது ஆன்லைன் மூலம் விளம்பரங்களை பார்ப்பது, சமூக ஊடகங்களில் லைக் மற்றும் ஷேர் செய்வது, சிறிய சர்வேகளை முடிப்பது, அல்லது தரவுகளை உள்ளீடு செய்வது போன்ற வேலைகளை செய்தால் கைநிறைய சபாதிக்கலாம் என்ற பெங்களூர் புஷ்பா விளம்பரத்தை ‘இன்ஸ்டாகிராம்’ பார்த்து இருக்கிறார்.
ஆன்லைன் மூலம் டாஸ்குகளை அனுப்பும் பெங்களூர் புஷ்வை தொடர்பு கொண்டுள்ளார் லட்சுமி. அப்போது புஷ்பா, லட்சுமியிடம் டாஸ்குகளை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில் பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதை நம்பி அனுப்பிய டாஸ்குகளை முடித்துக் கொடுக்கிறார்கள் மீனுக்கு உணவளிப்பது போல் சிறிய அளவில் பணம் அளித்து, அவர்களை நம்ப வைக்கிறார். அதன்பிறகு பல லட்சம் அனுப்பினால் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி வலைவிரிக்கிறார். வலையில் விழுந்த லட்சுமி பணத்தை தொலைத்துவிட்டு, திரும்ப பெற முடியாமல் காவல் நிலையத்திற்கு படையெடுத்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் லட்சுமி என்பவர் மண்ணடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில், “‘இன்ஸ்டாகிராம்’ மூலம் தனக்கு அறிமுகமான பெண் ஒருவர், ஆன்லைன் மூலம் தனக்கு டாஸ்குகளை அனுப்பி அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி நானும் புஷ்பா அனுப்பிய டாஸ்குகளை முடித்துக் கொடுத்தேன். அதற்கு முதலில் எனக்கு பணம் கிடைத்தது. அதை வைத்து ரூ.4.5 லட்சம் அனுப்பினால் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்றார்.இதை நம்பி நானும் புஷ்பாவிற்கு ரூ.4½ லட்சம் அனுப்பினேன். ஆனால், அவர் எவ்வித பணமும் தராமல் நான் அனுப்பிய ரூ.4½ லட்சத்தையும் சுருட்டிக் கொண்டு ஏமாற்றிவிட்டார். அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேணடும்” என தெரிவித்துள்ளார்.
லட்சுமியின் புகாரை வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த லில்லி புஷ்பா என்பது தெரியவந்தது. லில்லி புஷ்பாவை காவல்துறை பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட புஷ்பாவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.