விமானத்தில் சிக்கி உயிரிழந்த மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் முதல்வர் அஜித் பவார் சென்ற சிறிய ரக விமான காலை 8.45 மணிக்கு பாராமதி பகுதியில் விமானி தரையிறக்க முயன்றபோது தனி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் அஜித்பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட பலர் இறந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு, குறிப்பாக கூட்டுறவுத் துறையில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்தார்.

அதேபோல, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் பலர் விமான விபத்தில் இறந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் அவரது சக பயணிகள் இன்று விமான விபத்தில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில் மகாராஷ்டிர மக்களுடன் நான் நிற்கிறேன். இந்த துக்க நேரத்தில் அஜித் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார்.
இதேபோல, மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும் அவருடன் பயணித்தவர்களும் இன்று காலை பாராமதியில் நடந்த ஒரு கோரமான விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர், இதனால் நான் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளேன். அவரது மாமாவான சரத் பவார் ஜி உட்பட அவரது குடும்பத்தினருக்கும், மறைந்த அஜித் பவாரின் அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்தார்.