ஆரம்ப காலத்தில் மகளின் நிதி பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வரதட்சணை, தற்போது மணமகன் மற்றும் அவரது பெற்றோரால் கட்டாயமாக பெறக்கூடிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது. பெண்களுக்கு எதிராக பல உயிர் வாங்கும் இந்த வரதட்சணை 1961, மே 1-ந் தேதி முதல் வரதட்சணைத் தடைச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. எனினும், இந்தச் சட்டத்தால், வரதட்சணைக் கொடுமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த மட்டுமே முடிந்ததோ தவிர இன்றும் பல உயிர்களை காவு வாங்கிக்கொண்டேதான் உள்ளது.
இந்நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்ருதி, திருமணமான ஆறு மாதங்களுக்குள் மாமியார் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டு வந்து ஸ்ருதி முன்னதாகத் தன் தாயிடம் பேசியதன் ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி காவல் நிலைய எல்லை பகுதியில் வசித்து வரும் குருபிரசாத் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு கீர்த்தியின் பெற்றோர் ரூ.35 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தம்பதி சந்தோஷமாகவே வாழ்ந்து வாழ்ந்தனர்.அப்போது, குருபிரசாத் சொந்தமாக வீடு கட்டவும் முயற்சி செய்தபோது அதிக பணம் தேவைப்பட்டதால், தனது மனைவியிடம் பெற்றோரிடம் இருந்து கூடுதல் பணம் வாங்குமாறு டார்ச்சர் தர ஆரம்பித்து விட்டார்.
திருமணத்திற்கே தன்னுடைய பெற்றோர் அதிக செலவு செய்துவிட்டதால், அவர்களிடம் மீண்டும் சென்று தன்னால் பணம் கேட்க முடியாது என்றார். அதற்கு நேரத்தில் குருபிரசாத், வரதட்சணை குறைவாக போட்டார்களே? என்று சொல்லி கடந்த இரண்டு மாதங்களாக மனைவியை தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்தார். இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு கீர்த்தி ஆளானார். பெற்றோரின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, கூடுதல் பணம் கேட்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டார். கடந்த 24-ந் தேதி இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
தன் பெற்றோரிடமும் பணம் கேட்க முடியாமல், கணவரையும் சமாளிக்க முடியாமல் கீர்த்தி அன்றைய தினமே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே கீர்த்தியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள். மகளின் சாவுக்கு கணவர் குருபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் காரணமானதாக பெற்றோர் புகார் அளித்தனர். இத்தனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பனசங்கரி காவல்துறையினர் குருபிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கி.மு. 200 -ஆம் நூற்றாண்டு மேற்கு ஐரோப்பியாவில் தோன்றிய வரதட்சணை உலகின் பல நாடுகளில் மறைத்து போனாலும் நாம்நாட்டில் வரதட்சணை தடை சட்டம் கொண்டுவந்து 65 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் தொடர்ந்து பல உயிர் பலிகளை வாங்கிக் கொண்டே உள்ள வரதட்சணை கொடுமைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே வேதனையான விஷயமாகும்.