ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி என மனிதன் இன்று பிரிந்து இயந்திரத்தனமான இந்த ஓட்டத்தில் மனிதநேயத்தை தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கையில் ஆடம்பரமாக நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், மனநலம் குன்றிய ஒருவர் திருமணத்திற்கு அழைக்கப்படாமல் திருமணத்திற்கு செல்ல அங்குள்ளவர்கள் அவருக்கு அன்புடன் வரவேற்று உணவளித்துள்ள சம்பவம் மனிதநேயத்தை இன்னும் உயிருடன் வைத்திருக்கின்றது என்பதை உணர்த்துகிறது.
அசாம் மாநிலம், பர்பேட்டா பகுதியில் ஆடம்பரமாக நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், மனநலம் குன்றிய மனரஞ்சன் என்பவர் திருமணத்திற்கு அழைக்கப்படாமல் திருமணத்திற்கு சென்றிருந்தார். அங்குள்ளவர்கள் மனநலம் குன்றிய மனரஞ்சனை அன்புடன் வரவேற்று உணவளித்துள்ளனர். ஆடம்பரமான பரிசுகளும், பணமும் நிறைந்திருந்த அந்த திருமண மண்டபத்தில், மனரஞ்சன் சாப்பிட்டு முடித்ததும், யாரிடமும் சொல்லாமல் மணமகளின் கையில் ‘ஷகுன்’ (Shagun) என்று கூறி ₹10-ஐ பரிசாக அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.