தவெக பிரச்சார பயணத்த்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருந்த நிலையில், தவெக தொண்டர்கள் அந்த கட்டுப்பாடுகள் என்பவரையும் உடைத்து எறிந்தனர். குறிப்பாக ஆபத்தை உணராமல் ஓட்டு வீடுகளின் மேல் ஏறி நிற்கும் தவெக தொண்டர்களின் செயல் காண்போரை அச்சமடைய செய்தது. திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது முதல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். இதனையடுத்து காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருச்சி மரக்கடை பகுதியில் MGR சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளித்தது.
கட்டிடங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் மேல் விஜய் கட்சியினர் ஏறக்கூடாது, பட்டாசு வெடிக்கக்கூடாது, உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் விஜய் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். விஜயின் வருகையை ஒட்டி திருச்சியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் திருச்சி நோக்கி விரைந்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலைய வளாகத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இருக்க, காவல்துறை தடுப்புகளை அமைத்து இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் உடைத்துவிட்டு விஜயைக் காண ரசிகர்கள் சென்றதால், விமான நிலையம் பரபரப்புக்குள்ளானது. மேலும், விஜய் கட்சியினர் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
தவெக பிரச்சார பயணத்த்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. ஆனால் தவெக தொண்டர்கள் அந்த கட்டுப்பாடுகள் என்பவரையும் உடைத்து எறிந்தனர். விஜய்யின் பேருந்தை இருசக்கர வாகனங்களில் ரசிகர்கள் தொடர்ந்தனர் மேலும் விஜய் உரையாற்றவுள்ள இடத்தில் உள்ள MGR சிலை இரும்பு கூடத்தின் மீது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் தொண்டர்கள் ஏறினர். குறிப்பாக ஆபத்தை உணராமல் ஓட்டு வீடுகளின் மேல் ஏறி நிற்கும் தவெக தொண்டர்களின் செயல் காண்போரை அச்சமடைய செய்தது. இதனால் திருச்சியே பரபரப்பான சூழ்நிலையில் இருந்தது.