திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சண்முக ஆனந்த். இவர் வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பெறுப்பில் இருக்கிறார். திண்டுக்கல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் மண் அள்ளும் இயந்திரம்(JCB) ஓட்டுநர் வாஜித்அலி மற்றும் ஹக்கீம் லாரிக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவது குறித்து விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றும் சண்முக ஆனந்த் அவர்களை சந்திக்க பரிந்துரை செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து லாரி உரிமையாளர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று சண்முக ஆனந்த் அவர்களை சந்தித்து தன்னுடைய லாரிக்கு தகுதிச் சான்றிதழ் வேண்டியுள்ளார். போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்த் அவர்கள் ரூ.5,800 பணம் கொடுத்தால் மட்டுமே தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்ததாக தெரிகிறது. வை
ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத லாரி உரிமையாளர், திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்துக்கு பாடம் புகட்ட நினைத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய ரசாயனம் தடவிய 5,800 ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடம், லாரி உரிமையாளர் வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு உதவிய மண் அள்ளும் இயந்திரம்(JCB) ஓட்டுநர் வாஜித்அலி மற்றும் ஹக்கீம் ஆகிய இருவரிடமும் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.