பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கிய பிறகு முதல்முறையாக இன்று (ஜூன் 13) காலை 7.20 மணிக்கு கோயம்புத்தூர் வந்த அண்ணாமலை குப்புசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக டில்லி சென்ற அண்ணாமலை தமது ராஜினாமா கடிதத்தை தலைமையிடம் அளித்தார். அவரது முடிவை பாஜக ஏற்றுக் கொண்டு, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது.
அதன் பின்னர் தமது விலகல் முடிவை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்ட அண்ணாமலை குப்புசாமி, ‘we the leader’ இது நம்ம இயக்கம் (https://wetheleader.org/) என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார். இந்த இயக்கத்தில் இதுவரை 17 லட்சத்து 68 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் அரசியல் இயக்கத்தை தொடங்கிய பிறகு முதல்முறையாக இன்று (ஜூன் 13) காலை 7.20 மணிக்கு கோயம்புத்தூர் வந்த அண்ணாமலை குப்புசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சால்வை அணிவித்து, கோஷங்கள் எழுப்பியும் அண்ணாமலை குப்புசாமியை வரவேற்றனர்.