இந்திய அரசியல் வரலாற்றில்… பிரசாரம் அடிப்படையில்… கரூரில் ரசிகர்களை காவு வாங்கிய துயரச் சம்பவம். நாட்டையே உலுக்கிய நிலையில்… 3 நாட்கள் கழித்து, தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு, சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். என பேசியதின் உள்நோக்கம் என்ன? இத்தகைய தவெக தலைவர் விஜய்யின் பொறுப்பற்ற பேச்சு நமக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது?
செப்டம்பர் 27-ந் தேதி திருவள்ளூர் மற்றும் வட சென்னையில் பிரசாரம் மோற்கொள்ள வேண்டிய விஜய் ஏன் எதற்காக திடீரென்று நாமக்கல் மற்றும் கரூருக்கு தனது சுற்றுபயணத்தை மாற்றினார் ? நடைபெறவிறகுக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து எப்படியும் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவேன் என பேசி செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி. திமுக கூட்டணியை பிரிக்க எத்தனையோ முயற்சிகள் செய்வது நாடறிந்தது.
பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி எப்படி உடனே சென்றார் என்ற கேள்வி எழும் நிலையில் M. R. விஜயபாஸ்கர் மட்டும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே எப்படி சென்றார் என்ற கேள்வியும் மக்களுக்கு எழத்தான் செய்கிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகிய வி.கே. சசிகலா அதன்பின்னர் TTV. தினகரன், O. பன்னிர்செல்வம் மற்றும் KA. செங்கோட்டையன் என ஒவ்ரோருவராக அதிமுகவை விட்டு விலகி அதிமுகவை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதே போல தவெக தலைவர் விஜய்யை தன்னுடைய கூட்டணிக்கு இழுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் எடுபடவில்லை. ஆகையால் M. R. விஜயபாஸ்கரை வைத்து எடப்பாடி பழனிசாமி ஏன் சதி செய்திருக்க கூடாது என்ற கோணத்தில் இந்தியாவின் அரசியல் சாணக்கியன் கலைஞர் மு. கருணாநிதி இருந்து இருந்தால் இந்நேரம் விசாரணையை தொடங்கி இருப்பார்.