கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மின் நகரை சேர்ந்த தவெக பிரமுகர் ஆனந்தபாபு. இவர் சேத்தியாத்தோப்பில் அன்பு மெடிக்கல்ஸ் வைத்துள்ளார். மேலும், ஆனந்தபாபு மருத்துவம் படிக்காமலே, மருந்து கடை அருகே அன்பு மருந்துவமனை என்று ஒன்றை நடத்தி ஊசி போட்டு நோயாளிகளுக்கு மருத்துவமும் பார்த்து வந்ததுள்ளார்.

இந்நிலையில், பு. ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் ராகுல் என்பவர், பூச்சிமருந்து குடித்து உயிருக்கு போராடிய நிலையில், அவரை ஆனந்தபாபு நடத்தும் அன்பு மருந்துவமனையில் கடைக்கு நேற்றுமுன்தினம் உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராகுல் உயிரிழந்தார். சரியான சிகிச்சை அளிக்கப்படாததால்தான் அவர் இறந்து விட்டதாக பெற்றோர், உறவினர்கள் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

அதன்பேரில், விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆனந்தபாபு மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.