இந்திய கல்வி துறையில் சுமார் 23 லட்சம் மாணவர்களைப் பாதித்துள்ள நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு விவகாரம், தொடர்ந்து அரங்கேறி வரும் முறைகேடுகள் ஆகியவை நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை அடியோடு சிதைத்து வருகின்றன.
குறிப்பாக, நீட் (NEET) தேர்வு ரத்து விவகாரத்தாலும், தொடர் தேர்வு குளறுபடிகளாலும் அரசுப் பள்ளி மாணவர்கள், நடுத்தர குடும்பங்கள் வரை ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் கடும் சோகத்திலும், மன உளைச்சலிலும் தவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், இந்த விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நாடு முழுவதும் இளைஞர்களைத் திரட்டி வரும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP – Cockroach Janta Party) தனது அடுத்தகட்ட அதிரடிப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தனது எக்ஸ் பக்கத்தில், பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் ஜூன் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்த மாபெரும் போராட்டத்தில் அனைவரையும் கலந்துக்கொள்ள அழைத்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வேகத்தில் வைரலாகி வருகிறது.