மக்களால் நான்.. மக்களுக்காக நான்” என்ற கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரர், இந்த மண்ணைவிட்டு மறைந்து ஜெயலலிதா இன்றோடு 9 ஆண்டுகள் ஆகின்றது. ஜெயா, ஜெய், லில்லி என பல பெயர்களில் அழைக்கப்பட்ட அவர் அதிமுக தொண்டர்களால் அவரை அம்மா என்று பாசத்துடன் அழைத்தனர். “எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக இயங்கும்” என ஜெயலலிதா உற்சாகமாக அடிக்கடி கூறி கட்டிக்காத்த அதிமுகவின் வார்த்தை அவர் மறைந்து 9 ஆண்டுகளில் பல கூறுகளாக பிரிந்து கிடப்பதை எடப்பாடி பழனிசாமி, O. பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் TTV. தினகரன் உள்ளிட்டோர் தனித்தனியாக மலர் தூவி அஞ்சலி செலுத்தியதில் இருந்து நமக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
1952-ம் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு MGR அவர்கள் திமுகவில் சேர்ந்த MGR தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார். மேலும் காங்கிரஸை வீழ்த்த MGR திமுகவில் இருந்தபோது பல சமூக சிந்தனையுடைய திரைப்படங்கள் வெளியிடப்ட்டது. அந்த திரைப்படங்களில் சமுதாயத்தில் சில நச்சுக் கிருமிகள், பல நயவஞ்சகர்கள் மறைந்து இருக்கிறார்கள். அவர்களால், அவர்களது செயல்களால் இந்த நாட்டில் வெக்கபடத்தக்க வேதனைகள் நிகழ்கின்றன.
ஆசை முகம் படத்தில், வாலி வரிகளில் இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை… இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை…. என்ற எண்ணத்தின் அடிப்படையில் நீதிக்காக, நேர்மைக்காக, ஜாதிவெறி கூடாது என்பதற்காக, ஏழை, பணக்காரன் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக, சமூகத்தில் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதற்காக போராடினார். நாட்டு மக்களின் நல்வாழ்க்கைகாக, நாட்டு மக்களின் உயர்வுக்காக, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக இந்தப் போராட்டங்களை மேற்கொண்டார்.
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில், ஆலங்குடி சோமு வரிகளில் நான் ஆணையிட்டால்…அது நடந்து விட்டால்.. இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்… உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை… அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்… என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் கதாநாயகனும் தன்னைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடன் இருக்கும் மக்களுக்காக போராடுகிறான். அந்த அளவுக்கு நமது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்களை அழகாக, வரிசைப்படுத்தப்பட்டு சுவையான படமாக உருவாக்கப்பட்ட படங்களில் நடிப்பதன் மூலம் பெற்றுக் கொண்டே நற்பெயரினால் எம் ஜி ஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இதுதான் அன்று காங்கிரஸை வீழ்த்த துணையாக இருந்தது. அதன்பின் சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆனார். அதன்பின் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளிவேறினார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் அதிமுக என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் எம்.ஜி.ஆர் தம்மை இணைத்துக் கொண்டார். மேலும் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன் என அறிவித்து மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.
அதன்பின் இரவு, பகல் பாராமல் மக்களைச் சந்தித்து இரட்டை விரலைக் காண்பித்து இரட்டை இலையை மக்களின் மனதின் நீங்கா இடம் பிடிக்கச் செய்தார். 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் இரட்டை இலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி, அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு திமுகவை வீழ்த்தினார்.
மேலும் 1981-ல் அதிமுகவில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் இணைத்தது மட்டும் அல்லாமல் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கினார். அதன்பின் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். மேலும் எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் இருந்து கொண்டே பிரசாரத்திற்கு செல்லாமல் வெற்றி பெற்றார்.
அதாவது ஏறக்குறைய 10 ஆண்டுகள் தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். இந்த 10 ஆண்டுகளும் எம்.ஜி.ஆர் என்ற ஒரு தனி மனிதரையே மையப்படுத்தி தமிழக அரசியல் சுழன்று கொண்டு இருந்தது. தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் 1987 -ஆம் ஆண்டு டிசம்பர்-24 அன்று மரணமடைந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் யார் தமிழக முதலமைச்சராவது என்று அதிமுகவில் சர்ச்சை எழுந்தது. ஆனால் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் 132 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி முதலமைச்சரானார். ஆனால் 33 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஜெயலலிதா அதிமுகவை பிரித்தார். இதனால் 1988 ஜனவரி 26-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியன் அவர்கள் 33 ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தார். மேலும் ஜெயலலிதா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில் கலவரம் ஏற்பட்டு 1988 ஜனவரி 30-ந் தேதி ஜானகி ஆட்சியை மத்திய அரசு கலைத்தது. அதன்பின் 1989-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி தலைமையில் இரட்டை புறா சின்னத்தில் ஒரு அணியாகவும், ஜெயலலிதாவின் தலைமையில் சேவல் சின்னத்தில் மற்றொரு அணியாகவும் களமிறங்கியது.
அதில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை இந்த தோல்விக்கு காரணம் அதிமுக இரு அணிகளாக செயல்பட்டது தான் என அரசியல் விமர்சர்களால் விமர்சிக்கப்பட்டது. அதன்பின் அதிமுக ஜெயலலிதாவின் தலைமையில் ஒன்றிணைந்து விட்டதால், மீண்டும் இரட்டை இலை சின்னம் ஓதுக்கப்பட்டு 1991-ல் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு பின் அதிமுக துண்டு, துண்டாக உடைந்துவிடும் என்ற கணக்கை உடைத்து தனது தலைமையின் கீழ் சுமார் 28 ஆண்டுகள் கட்சியைக் கட்டுக்கோப்பாக வழி நடத்திய புரட்சித்தலைவி அதிமுக விழும்போதெல்லாம் வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல் என்ற வேதவாக்கிற்கு ஏற்ப ஜெயலலிதா அதிமுகவை அதிக தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி வைத்து அதிக தொடர்களைக் கொண்ட கட்சியாக மாற்றி தமிழக முதலமைச்சராக 6 முறை வகித்தவர்.
இப்படி சுமார் அரைநூற்றாண்டுக் கால தமிழக அரசியல் வரலாற்றில் தமிழகத்தில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக அதிமுக இருந்தது என்பதை யாராலும் மறைக்க முடியாத உண்மை. அப்பேற்றபட்ட புகழுடைய அதிமுக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தனிமனிதரை மையமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், “என் வாழ்க்கையை நான் அமைத்துக்கொள்ள நினைத்த விதம் வேறு; அது அமைந்த விதம் வேறு”என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். ஆனால், ஜெயலலிதா தன்னுடைய 68-வது வயதில் 2016 டிசம்பர் 5-ந் தேதி அன்று விடைபெற்றது ஒரு மரணம் யாராலும் நிறைக்க முடியாத வெற்றிடத்தை உருவாக்குகிறது என்ற வார்த்தைகள் ஜெயலலிதாவைப் பொறுத்த அளவில் முழுக்கப் பொருந்தக் கூடியது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரின் தோழி வி.கே. சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் வி.கே. சசிகலா பெங்களூரு சிறைக்கு செல்ல நேர்ந்தது. வி.கே. சசிகலா சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்தது அதிமுக அரசியலில் புதிய திருப்பமாக அமைந்தது. அதன்பின்னர் 2017 ஆகஸ்ட் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் வி.கே. சசிகலா மற்றும் TTV. தினகரன் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டனர்.
இருப்பினும் அதிமுகவில் “ஒற்றைத் தலைமை” விவகாரம் தொடர்ந்தபடியே இருக்க ஈபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என அதிமுக இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. இறுதியில், 2022 -ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஒருங்கிணைப்பை வலியுறுத்தி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் செங்கோட்டையனும் பங்கேற்றது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பழனிசாமி தலைமையில் சேலத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேரிலும், தொலைபேசியிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்பின்னர், செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்பின்னர், செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இப்படி வி.கே. சசிகலா, TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் என தொடர்ந்து வெளியேற்றப்படுவது அதிமுக தனித்தனியாக மலர் தூவி அஞ்சலி செலுத்தியதில் இருந்தே அதிமுக மெல்ல மெல்லக் குறைந்துகொண்டே இருக்கின்றது.