திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விவசாயிகள் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு CITU, AITUC மற்றும் SKM உள்ளிட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய மோடி அரசு தொழிலாளர்களின் விரோத சட்டத்தினை முழுமையாக ரத்து செய்து விட வேண்டும். வேளாண் விலை பொருள்களுக்கு சட்டபூர்வமான குறைந்தபட்ச ஆதார விலை செய். குறைந்தபட்ச ஊதியம் 28000 வழங்குக விவசாயிகளுக்கு ஆதார விலை வீட்டு செலவு 50 சதவீதத்தை சட்டபூர்வமாக்கு. மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை விபி ராம்ஜி திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். மக்களுக்கு எதிரான உள்ள அனைத்து திட்டங்களையும் முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் போன்ற பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் ராஜேந்திரன்,ராஜா, ஜோசப் நாகராஜ் மற்றும் CITU, AITUC மற்றும் SKM உள்ளத்தை தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு. ஒன்றிய மோடி அரசுக்கு எதிரான மாபெரும் முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.