கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பூசாரிபட்டியில் இயங்கிவரும் சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொள்ளாச்சி சதுரங்க சங்கம் மற்றும் எழில் பல் மருத்துவமனை. இணைந்து நடத்தும் கர்மவீரர் காமராஜர், கக்கன் மற்றும் வி.பி.சிங் ஆகியோரின் பிறந்தநாள் முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், கோலப்போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, கடிதம் எழுதும் போட்டி, ஓவியப்போட்டி, மாறுவேட போட்டி, திருக்குறள் மற்றும் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர் மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் இந்த போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.