அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அரியலூர் மாவட்டம், அரியலூர் தெற்கு ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது, ப. உத்திராணி பச்சமுத்து என்கின்ற பெண் ஒருவர் தனக்கு உதவி செய்திடுமாறு கோரிக்கை ஒன்று வைத்தார்கள். அந்தப் பெண்மணிக்கு ரூபாய் 50,000 காசோலையை எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில், முன்னாள் அரசு தலைமை கொறடா அரியலூர் மாவட்ட கழக செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்கள் இருந்தனர்.