சென்னை ஆர்.கே. நகரில் உறவினர் வீட்டிற்குச் சென்ற 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு, கொலை செய்துவிடுவதாக மிரட்டிய தவெக நிர்வாகி தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற தினமான ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தினேஷ் என்கின்ற ’பாம்பு தினேஷ்’ என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பெற்றோரிடம் கூற கடந்த 3-ந் தேதி இதுகுறித்த புகாரினை சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் 4-ஆம் தேதி தினேஷை கைது செய்ய முயன்றுள்ளனர். ஆனால், தினேஷ் ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு என்னும் மையத்திற்குச் சென்றிருந்ததால் கைதுசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தினேஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட தினேஷ் 43-வது வார்டு தமிழக வெற்றிக் கழகவட்டச் வட்டச் செயலாளர் என்பதும், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய வில்சனுடன் சேர்ந்து அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.