தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 2500 மாணவிகள் பயின்று வரும் ஸ்ரீ ராம மந்திரம் (SRM) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் போதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் இயற்கை உபாதைகள் கழிக்க அருகிலுள்ள வீடுகளுக்கு செல்லவேண்டிய அவலமான சூழ்நிலை உள்ளது.

இதில் பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் கட்டியதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்ட தலைமை ஆசிரியை ஜீவா அவர்களை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ரேணுகா அவர்கள் உத்திரவிட்டார்.