தாய்க்கு நிகராக இருக்கும் ரசிகர்களிடம் கேட்கிறேன்.. நான் அரசியலுக்கு வரலாமா.. நீங்களே சொல்லுங்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் காலை 10 மணிக்கு ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் எவ்வளவு நெருக்கமோ, அதேபோல் நண்பர் விஜய்யும் அதே அளவிற்கு நெருக்கம் தான். மேகமாய் வந்து போகிறேன் பாட்டில் தொடங்கி விஜய்க்காக நான் நடனம் அமைத்திருக்கிறேன்.
சரக்கு வச்சுருக்கேன், தாம் தக்க தீம் தக்க உள்ளிட்ட பாடல்கள் உங்களுக்கே தெரியும். அவருக்காக மட்டுமே தமிழில் பணியாற்றினேன். வேறு யார் அழைத்தாலும் வர மாட்டேன். விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த போது, எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனென்றால் விஜய் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதில் பின்வாங்க மாட்டார். பின்னர் என்னுடைய அம்மாவை சந்தித்தேன். அவருடன் அரசியலில் இணையலாமா என்று அம்மாவிடம் கேட்டேன்.
உடனே என் அம்மா விஜய்யை சந்திக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அங்கு அழைத்து சென்றால், விஜய்யிடம் நீ அரசியலுக்கு வராதே.. என்று அட்வைஸ் கொடுக்க தொடங்குவேன் என்றார். அதனால் அரசியலுக்கு செல்லும் முடிவை எடுக்க தாமதமாகியது. இருந்தாலும் விஜய்யிடம் அரசியல் தொடர்பாக பேசிக் கொண்டே இருந்தேன். கூட்டணிக்கு யாரும் வராதது குறித்தும் புலம்பினேன்.
ஆனால் தேர்தல் முடிவுகள் வரலாற்றை புரட்டி போட்டது. அதனை அம்மாவிடம் காட்டிய போது, நான் அரசியலுக்கு செல்ல நம்பிக்கையுடன் அனுமதி அளித்தார். இருந்தாலும் தாய்க்கு நிகராக இருக்கும் ரசிகர்களிடம் கேட்கிறேன்.. நான் அரசியலுக்கு வரலாமா.. நீங்களே சொல்லுங்கள்.. கமெண்ட் செய்யுங்கள் என ராகவா லாரன்ஸ் வீடியோவில் பேசியுள்ளார்.