பாஜகவின் பினாமி மாலினி ஜெயச்சந்திரன் கருப்பு பணத்தில் வாங்கிய சொத்து பத்திரங்களை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய் பிரிவு இயக்குனர் அலுவலகத்தில் 10-வது முறையாக புகார் கொடுத்து ஒப்படைக்கின்றோம் என தமிழர் முன்னேற்றப் படை.நிறுவனத் தலைவர் கி. வீரலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கி. வீரலட்சுமி விடுத்துள்ள செய்தி குறிப்பில், பாஜகவின் பினாமி மாலினி ஜெயச்சந்திரன் கருப்பு பணத்தில் வாங்கிய சொத்து பத்திரங்களை 10-வது முறையாக புகார் கொடுத்து ஒப்படைக்கின்றோம். இந்த தேடலில் நடிகை குஷ்பூ வானதி சீனிவாசன் அண்ணாமலை சொத்துகளும் கிடைக்கப் பெற்றுள்ளது. (7:11:2025) இன்று காலை 11:00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய் பிரிவு இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து சொத்து பத்திரங்களை ஒப்படைக்கின்றேன்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் உலகம் காணாத மாபெரும் ஊழல் நடந்துள்ளது. தமிழர் முன்னேற்ற படையின் அதிரடி நடவடிக்கையால் அடுத்த 6 மாதங்கள் தமிழ்நாடு சுத்தமாக போகிறது என கி. வீரலட்சுமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.