இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது T-20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-1 என இந்தியா முன்னிலை உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட T-20 முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஹோபர்ட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. T-20 தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில் கோஸ்ட் நகரில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் 4-வது போட்டியில் இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் தொடரில் முன்னிலை பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இரு அணிகளும் கோல்ட் கொஸ்ட்டில் நடைபெற்ற நிலையில், நான்காவது டி20 போட்டியில் பலப் பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய இந்திய வீரர்கள் அபிசேக் சர்மா, சுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடினர். 6.4 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்து நிலையில் ஆடம் ஜாம்பா பந்து வீச்சில் அபிசேக் சர்மா 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என உட்பட 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து மூன்றாவது வீரராக யாருமே எதிர்பார்க்காத வகையில் களமிறங்கிய சிவம் துபே மற்றும் சுப்மன் கிலுடன் இணைய 11.3 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்து நிலையில் நேதன் எல்லிஸ் பந்து வீச்சில் சிவம் துபே 18 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கிலுடன் இணைய 14.1 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து நிலையில் நாதன் எலீஸ் பந்து வீச்சில் சுப்மன் கில் 39 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவுடன் இணைய 15.1 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து நிலையில் சேவியர் கோலின் பார்ட்லெட் பந்து வீச்சில் சூரியகுமார் யாதவ் 10 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் அக்சர் பட்டேல் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என 11 பந்துகளில் 21 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் ஆடம் ஜாம்பா மற்றும் நாதன் எலீஸ் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர் கேப்டன் மிட்செல் மார்ஸ் மற்றும் மேத்தீவ் ஷார்ட் ஆகியோர் வழக்கம் போல் அதிரடி காட்டிய போது 4.5 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்து நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் மேத்தீவ் ஷார்ட் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஸ் இங்கிலீஷ் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஸூடன் இணைய 8.5 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்து நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஜோஸ் இங்கிலீஷ் 11 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஸ் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஸூடன் இணைய 9.2 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்து நிலையில் சிவம் துபே பந்து வீச்சில் மிட்செல் மார்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த அதிரடி வீரர் டிம் டேவிட் 14 ரன்களிலும், ஜோஸ் பிலிப் 10 ரன்களிலும், மார்க்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய மேக்ஸ்வெல் 2 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று பென் டவார்ஷிஸ் 5 ரன்கள் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி 119 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய பந்து வீச்சு தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளையும் அர்ச்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டு கைப்பற்றினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 – 1 என்று கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது.