AICCTU சங்க பீடி தொழிலாளர்கள் போனஸ் மற்றும் விடுப்பு சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்தாளம்பாறை காஜா பீடி நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தென்காசி அருகே மத்தாளம்பாறையில் AICCTU சங்க பீடி தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் புதிய பீடி கான்ராக்டர் போட்டு பீடி பாஸ்புக் மாற்றுவதை கண்டித்தும் 3 ஆண்டுக்கு மேலாக பீடி தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய போனஸ் மற்றும் விடுப்பு சம்பளம் உடனடியாக வழங்க வேண்டியும் 2021 முதல் பீடி தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து 4 ஆண்டுகள் PF அலுவலகத்தில் செலுத்த வேண்டிய PF பணம் பலகோடி ரூபாயை உடனே செலுத்திட கோரியும் திடிரென AICCTU சங்க பீடி தொழிலாளர்கள் மத்தாளம்பாறை காஜா பீடி நிறுவனம் முன்பு கிளை நிர்வாகிகள் தோழர்கள் செல்வி, முத்துலெட்சுமி, வள்ளிமயில் தலைமையில் முற்றுகை போராட்டம்நடைபெற்றது.

AICCTU தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் M வேல்முருகன் மத்தாளம்பாறை காஜா பீடி கம்பெனி கிளை மேலாளர் அவர்களிடம் நேரிலும் மற்றும் காஜாபீடி கம்பெனி நிர்வாக மேலாளர் திரு கபூர் அவர்களிடம் செல்போனிலும் பேசினார். புதிய கான்ராக்டர் பெயரில் பீடி பாஸ்புக் வழங்கபடாது என இருவரும் உறுதியளித்தார்கள் நாளை நேரில் வருவதாகவும் நீங்கள் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
மேலும் 3 ஆண்டு போனஸ் விடுப்பு சம்பளம் மற்றும் 4 ஆண்டு PF பணம் சம்மந்தமாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் 50 -க்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் AICCTU தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் M . வேல்முருகன் தலைமையில் புகார்மனு கொடுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி வருகின்ற ஜுலை 9-ந் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் தென்காசி பழைய பேருந்து நிலையம் முன்பு 4 தொழிலாளர் விரோத சட்டத்தை ஒன்றிய அரசு வாபஸ் வாங்கிட கோரி நடைபெறும் மறியல் போராட்டத்தில் அனைத்து பீடித் தொழிலாளர்களும் பங்கேற்பது என போராட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.