இந்தியாவில் கணவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தங்கள் துணையை விட்டு பிரிய சிவில் நீதிமன்றத்திற்கு வரலாம். ஆனால், ஒரு ஆண் திருமணமான பெண்ணுடனோ, ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு இன்னாரு திருமணம் ஆன ஆணுடன் ஒன்றாக உறவு வைத்துக் கொள்வது என்பது சட்ட ரீதியாக தவறு இல்லை என்பது தான் இந்தியாவில் சட்ட ரீதியான கசப்பான உண்மை. இதனால் கள்ளக்காதல்கள் இப்போது சர்வ சாதாரணமாக அதிகரித்துவிட்டது. பல குடும்பங்களில் ஆண், பெண் இருவருமே பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை பேசி தீர்க்காமல் குடி மற்றும் கள்ளக்காதல் தேர்வு செய்கிறார்கள். இதன் விளைவு குடிப்பழக்கம் எப்படி பலரது கல்லீரலை காலி செய்கிறதோ, அதுபோல் குடும்பம் என்ற கல்லீரலை கள்ளக்காதல் காலி செய்த வருகிறது.
சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வரும் தொழிலதிபரின் மனைவி ரம்யா அதே குடியிருப்பில் வாடகைக்கு குடியேறிய திலீப் என்ற ராஜஸ்தான் இளைஞருடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் நாளடைவில் முறையற்ற உறவாக மாறியுள்ளது. வேலையில்லாத திலீப்பின் ஆடம்பரச் செலவுகளுக்காக அந்தப் பெண் அவ்வப்போது சிறுக சிறுக சுமார் 850 கிராம் தங்கம், விலை உயர்ந்த வைர நகைகள் மற்றும் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்களைப் பறித்த சம்பவம் ஒருபுறம் இருக்க.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுநல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 7 வயது பெண் குழந்தையும், 5 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன் வேலைக்குச் சென்ற நேரத்தில் கள்ளக்காதலனுடன் நெருங்கிய பழக்கிய விஷயம் வெளியுலகிற்கு தெரிந்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார் போன்ற சம்பவங்களின் வரிசையில் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூரு பாகலகுண்டே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விஜயலட்சுமி லே-அவுட் பகுதியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டில் கடந்த 1-ந் தேதி கடும் துர்நாற்றம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து வேகமாக உள்ளே சென்றனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்டும், வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட உடல் அழுகிய நிலையில் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பாகலகுண்டே காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நிதி நிறுவன உரிமையாளர் மோகன் கிருஷ்ணா என்பதும் அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததும் அங்கு அவருடன் தங்கி இருந்த மனைவி கன்னட துணை நடிகை பிந்து கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. இந்நிலையில், மோகன் கிருஷ்ணா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிந்து, அவரது கள்ளக்காதலன் வினய் மற்றும் தனுஷ் கவுடா ஆகிய 3 பேரையும் கைது செய்தார்கள்.
பெங்களூரில் உள்ள மஞ்சுநாத் நகரில் மோகன் கிருஷ்ணா ராவ் திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால், அவரை மோகன் கிருஷ்ணா பிரிந்து வாழ்ந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வந்த கணவனை பிரிந்து வாழும் பிந்து என்ற பெண்ணுடன் மோகன் கிருஷ்ணா ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
தனியாக வசிக்கும் பிந்து மற்றும் மோகன் கிருஷ்ணா ராவ் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெங்களூரு பாகலகுண்டே விஜயலட்சுமி லே-அவுட் பகுதியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமாக வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வாடைக்கு எடுத்து இருவரும் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மஞ்சுநாத் நகரிலும் வசித்து வரும் வினய் என்பவருடன் பிந்துவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் வினய், பிந்து இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளத்தொடர்பு மோகன் கிருஷ்ணாவுக்கு தெரியவர இதனைக் கண்டித்துள்ளார். பிப்ரவரி 18-ந் தேதி இரவு, மோகன் கிருஷ்ண ராவ் பிந்து மீது பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்த முயன்றுள்ளார்.
இதனால் மீண்டும் பிந்துவுக்கும் மோகன் கிருஷ்ண ராவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிந்து தனது புதிய காதலன் வினய்க்கு போன் செய்து விவரத்தை சொல்லியுள்ளார். தகவல் அறிந்த வினய் தனது நண்பன் தனுசுவை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்க்கு வந்தனர். அங்கு, குடிபோதையில் நிர்வாண கோலத்தில் அமர்ந்திருந்த மோகன் கிருஷ்ண ராவை பின்னால் இருந்து கத்தியால் தாக்கினர். அப்போது, மோகன் கிருஷ்ண ராவ் அலறியதால், அவர்கள் அவரது கைகளையும் கால்களையும் கட்டி, அவரது வாயை நாடா போட்டு, கத்தி மற்றும் கம்பியால் குத்திக் கொலை செய்துவிட்டு 3 பேரும் தப்பி ஓடியது தெரியவந்தது.