குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற WPL இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
WPL 2026 தொடரில் லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றுப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதன் மூலம் அந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு கோப்பையை வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்மிருதி மந்தனா தலைமையில் ரிச்சா கோஷ், கிரேஸ் ஹாரிஸ், போன்ற நட்சத்திர வீராங்கனைகள் கொண்டு இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது.
மறுபுறம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில், யுபி வாரியர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்ற நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

மேலும் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயத்தை 169 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்துப் புதிய சாதனையையும் படைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, லாரா வோல்வார்ட் மற்றும் மரிசான் கேப் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். எப்படியாவது இம்முறை கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற வெறியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையே பலப்பரீட்சை நடைபெறுகின்றது.
இந்நிலையில் வதோதராவில் உள்ள பி.சி.ஏ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனைகள் லிசெல் லீ, ஷெஃபாலி வர்மா முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர். 5.5 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து நிலையில் அருந்ததி ரெட்டி பந்து வீச்சில் ஸ்மிருதி மந்தனா 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய லாரா வால்வார்ட் மற்றும் லிசெல் லீவுடன் இணைய 7.3 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்து நிலையில் நதின் டெ கிளெர்க் பந்து வீச்சில் லிசெல் லீ 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் லாரா வால்வார்ட்வுடன் இணைய 15.6 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து நிலையில் சயாலி சத்காரே பந்து வீச்சில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய சினெல் ஹென்ரி மற்றும் லாரா வால்வார்ட்வுடன் இணைந்து அதிரடியாக விளையாடினர். லாரா வால்வார்ட் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்உட்பட 44 ரன்களில் ஆட்டமிழக்க, சினெல் ஹென்ரி 15 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 35 ரன்களில் ஆட்டமிழக்காமலும் 20 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் சயாலி சத்காரே, அருந்ததி ரெட்டி, நதின் டெ கிளெர்க் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து 204 ரன்கள் கடின இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் களமிறங்கி நிலையில் சினெல் ஹென்ரி பந்து வீச்சில் கிரேஸ் ஹாரிஸ் 7 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்திபோது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த முறை கோப்பை கைப்பற்றுவது உறுதி என்ற நிலை உருவானது.

ஆனால், அடுத்து களமிறங்கிய ஜார்ஜியா வோல் மற்றும் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதற அடித்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி அடுத்தடுத்து அரை சதங்களை கடந்தனர். மேலும் இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கோப்பை கனவை தகர்த்தெறிந்தனர்.
16.3 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து நிலையில் மின்னு மணி பந்து வீச்சில் ஜார்ஜியா வோல் 54 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட 79 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.