ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் மனைவி பிரியங்கா நடனமாடி வழியனுப்பி வைத்து… ஒருவருடைய இழப்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று செய்வதற்கு மற்றவர்களுக்கு உரிமை கிடையாது என முன்னாள் மைலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினர் SV. சேகர் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞர் ரோபோ சங்கர், தனது 46-வது வயதில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி திறன்கள் மூலம் புகழ்பெற்ற ரோபோ சங்கர், பின்னர் மாரி, விஸ்வாசம், காஞ்சனா 2 போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
மது பழக்கம் காரணமாக ரோபோ சங்கரின் கல்லீரல் கடுமையாக ரோபோ சங்கர் உடல் பாதிக்கப்பட்டிருக்க, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்று கடுமையான உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு 120 கிலோ அளவு்ககு உடல் எடை கொண்டிருந்த அவர், திடீரேன 40-50 கிலோ எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாவர் போல மாறியிருந்தார். அப்போது தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
சிகிச்சையின் பலனால் ரோபோ சங்கர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். உடல் எடை முன்பு போலவே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. சில மாதங்கள் அவர் மது அருந்தாமல் இருந்தார். ஆனால், மீண்டும் மது பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிப்பு தீவிரமடைந்து, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
தமிழக அரசு நடத்திய இளையராஜாவுக்கான இசை பாராட்டு நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் பங்கேற்றிருந்தார். அவர் பங்கேற்றிருந்த கடைசி நிகழ்ச்சி அதுதான். அதன் பின்னர் விஜய் டிவி செட்டில் திடீரென மயக்கமடைந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீட்டில் இறுதி அஞ்சலி செல்துதப்படுவதற்காக வைக்கப்பட்டது. அப்போது, சின்னத்திரை நடிகர்கள் முதல் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கரின் இறப்பு அவரது குடும்பத்தினரிடம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ரோபோவிடம் அவரது மனைவி மற்றும் மகள் கதறி அழுத வீடியோக்கள் பார்ப்போரை கலங்கவைத்துள்ளன.
அதே நேரத்தில், ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி பிரியங்கா இருவருமே மதுரையில் குரூப் டான்ஸராக இருந்தவர்கள். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நடன நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலக்கியவர்கள். ஒரு நடன கலைஞனுக்கு அவனது மனைவி நடனமாடி தனது கணவரை வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ பலரை மனமுருக செய்தது. ஆனால், தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ஆடிய பிரியங்காவை சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் மனைவி பிரியங்கா நடனமாடி வழியனுப்பி வைத்து… ஒருவருடைய இழப்புக்கு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அந்த இழப்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. சில பேர் வீட்டில் இறப்பு என்றால் சப்தம் போட்டு அழுவார்கள். இன்னும் சிலர் அமைதியாக அழுவார்கள். அதற்காக அவர்களுக்கு சோகம் இல்லை என்றாகிவிடாது. ரோபோ சங்கரின் இறுதி பயணத்தின் போது, இனி அவரை பார்க்க முடியாது என்ற துக்கத்தின் வெளிப்பாட்டை பிரியங்கா நடனம் மூலம் காட்டியுள்ளார்.
அதை விமர்சிக்க யாருக்கும் அருகதையே இல்லை. அவர் ஒன்றும் தனது கணவர் மரணத்திற்காக உங்கள் வீட்டு வாசலில் நின்று நடனம் ஆடவில்லை. சமூகவலைதளம் இருக்கே என்பதற்காக யாரையும் புண்படுத்தாதீர்கள். எத்தனை ஆண்டுகளானாலும் ரோபோ சங்கரின் அந்த மரணம், அவருடைய மனைவிக்கு கொடுக்கக் கூடிய பாதிப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. தயவு செய்து அடுத்தவர்களின் சோகத்தையோ துக்கத்தையோ விமர்சனம் செய்யாதீங்கள். அந்த துக்கத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது அவரவர் மனோபாவம். அது அவருடைய குடும்ப விஷயம் என முன்னாள் மைலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினர் SV. சேகர் தெரிவித்துள்ளார்.