கட்டுமஸ்தான விதவிதமான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளம்பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்ட வாலிபர் கைது சென்னையை பரபரப்பாக செய்துள்ளது.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு அவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். அவர், மறுமணம் செய்வதற்கு ஆன்லைன் திருமண செயலியில் பதிவு செய்தார்.
அப்போது, அவருக்கு அதே செயலியில் பதிவு செய்து வைத்திருந்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அந்த பெண்ணிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உங்கள் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்ற கட்டு கதைகளை சுரேஷ்குமார் அள்ளி வீசியுள்ளார். இதையடுத்து, இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டு, நாளடைவில் இவர்கள் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றும் வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ்குமாரும் இளம்பெண்ணும் சந்தித்துள்ளனர். அப்போது, ஆசை வார்த்தை கூறிய சுரேஷ் குமார் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், இருவரும் பேருந்து நிறுத்தம் அருகே இருவரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, பையில் இருந்த இளம்பெண்ணின் 10 சவரன் நகையை சுரேஷ்குமார் திருடிவிட்டு சென்றுள்ளார். அவர் சென்ற பின்னர் தனது பையை சோதித்த இளம்பெண் அதில் இருந்த 10 சவரன் தங்க நகை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சுரேஷ் குமாருக்கு போன் செய்துள்ளார். ஆனால் சுரேஷ்குமார் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை சுரேஷ் குமாரை கைது செய்தனர். சுரேஷ் குமாரிடம் நடத்திய விசாரணையில் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவிட்டு, கிண்டியில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார். முன்னதாக அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மருந்து விற்பனை பிரதிநிதியாகவும், தனியார் வங்கி ஒன்றில் கலெக்சன் ஏஜெண்டாகவும் வேலை செய்துள்ளார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு மேடவாக்கத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் அந்தப் பெண்ணை பிரிந்த சுரேஷ்குமார், 2021-ல் பூந்தமல்லியில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். நகை, பணம் கேட்டு அடிக்கடி பிரச்சினை செய்து அவரையும் பிரிந்துள்ளார். அதன் பிறகுதான் கே.கே.நகரைச் சேர்ந்த தற்போது புகார் அளித்த பெண்ணிடம் திருமண ஆசைகாட்டி, நகையைப் பறித்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சுரேஷ் குமார் மீது ஏற்கனவே நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் காவல் நிலையங்களில் இதுபோன்ற திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், சுரேஷ் குமார் இதுபோன்று 8 பெண்களை காதல் வலையில் சிக்க வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. சுரேஷ் குமார் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தனது உடலை மிகவும் கட்டுமஸ்தாக வைத்துள்ளார். அந்த உடலின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
மேலும், விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இளம்பெண்களை சுரேஷ் குமார் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதுவரை 8 பெண்கள் அவரின் காதல் வலையில் சிக்கியுள்ளனர். 4 பெண்களை கட்டுமஸ்தான் உடலை காட்டியும், வசீகரிக்கும் பேச்சின் மூலமாகவும் சுரேஷ் குமார் மயக்கியுள்ளார். மேலும், 4 பெண்களுடன் செல்போன் தொடர்பில் இருந்து அவர்களோடு சாட்டிங் செய்து வந்துள்ளார். கணவரை பிரிந்து அல்லது விவாகரத்து செய்து தனியாக வசித்துவரும் இளம் வயது பெண்களை மட்டுமே குறிவைத்து சுரேஷ்குமார் செயல்பட்டு வந்துள்ளார்.
அந்த பெண்களிடம் உங்கள் குழந்தைகளை எனது குழந்தை போல் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பியே இளம்பெண்கள் சுரேஷ் குமாரின் வலையில் விழுந்துள்ளனர். அவ்வாறு வலையில் விழும் இளம்பெண்களை தனியே சந்தித்து உல்லாசம் அனுபவித்து விட்டு அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதை சுரேஷ்குமார் வாடிக்கையாக வைத்துள்ளார். இதுபோன்ற செயலில் ஈடுபட்டபோது இளம்பெண் அளித்த புகாரிலேயே சுரேஷ்குமார் சிக்கியுள்ளார்.