கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சீலக்காம்பட்டி ஊராட்சி நியாய விலைக் கடையில் நடந்த பொங்கல் திருநாளுக்காக பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவிற்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், ஒன்றியம் கமலக்கண்ணன், சிலக்காம்பட்டி துணைத் தலைவர் சம்பத், மலையாண்டிபட்டினம் மணிராஜ், பனை மரத்து பாளையம் சந்திரசேகர், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொள்ளாச்சி தெற்கு தனி அலுவலர், பொள்ளாச்சி வட்ட வழங்கல் வட்டாட்சியர் ஆகியோர் வரவேற்றார். விழாவில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம், இலவச வேட்டி-சேலை ஆகியவை வழங்கப்பட்டன.