தமிழகத்தை சேர்ந்த இந்தியா தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர், தடை செய்யப்பட்ட ‘ட்ரோஸ்டனோலோன்’ ஊக்கமருந்தை இரண்டாவது முறையாகப் பயன்படுத்தியதாக அவருக்கு 8 ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் உஷா தம்பதியரின் மூன்றாவது குழந்தை தனலட்சுமி. இளம் வயதில் ஊக்கப்படுத்திய தந்தை சேகர் இறந்துவிட தாய் உஷா கூலி வேலைக்கு சென்று போட்டிகளுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் பயிற்சியாளர் மணிகண்டன் அருண்முகம் மூலம் கிடைத்த ஸ்பான்சர்களின் உதவியால் தேசிய போட்டிகளுக்கு சென்றார். தனலட்சுமியின் இரண்டாவது ஒருவர் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக 2021 இல் இறந்தார்.
இந்நிலையில், 2021- ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப்பின் பட்டியாளாவில் நடந்த தேசிய பெடரேசன் கோப்பை தடகளப் போட்டடியல் கலந்துகொண்டு 100 மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து, இந்தியாவின் முன்னணி வீராங்கனையான டூட்டியின் சாதனையை முறியடித்தார். இதேபோல 200 மீட்டர் போட்டியில் 23.26 வினாடிகளில் கடந்து பி. டி. உசாவின் சாதனையை முறியடித்த தனலட்சுமி தேசிய அளவில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 4×400 கலப்பு தொடர் போட்டிக்கான இந்திய அணியிலும் தனலட்சுமி இடம் பிடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு இறுதிக்கட்ட அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், 2022 ஜூலையில் தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். உலக தடகளத்தின் தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு (AIU) அன்டலியாவில் நடத்திய போட்டிக்கு அப்பாற்பட்ட சோதனையிலும், NADA-வும் இதை உறுதிப்படுத்தின. அப்போது மெத்தாண்டினோன் என்ற ஸ்டீராய்டுக்காக தனலட்சுமி சிக்கினார். ட்ரோஸ்டனோலோன் (drostanolone) என்பது தசையை அதிகரிக்கும், பலத்தை மேம்படுத்தும், கொழுப்பைக் குறைக்கும் ஒரு ஸ்டீராய்டு. அனைத்து ஸ்டீராய்டுகள் போலவும், இது உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியால் (WADA) தடை செய்யப்பட்டுள்ளது. இது செயல்திறனை செயற்கையாக மேம்படுத்துவதோடு, ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளாகும்.
ட்ரோஸ்டனோலோனை ஒரு துணை உணவிலிருந்தோ, மருத்துவர் பரிந்துரைத்த மருந்திலிருந்தோ, உணவுடன் தற்செயலாக கலந்திருந்தோ, அல்லது உணவு “சதி செய்யப்பட்டோ” கொடுக்கப்பட்டது என நிரூபித்தால் மட்டுமே குறைந்த தண்டனைக்கு வாய்ப்பாக இருந்திருக்கும். தனலட்சுமி ஜூலை 19 அன்று சேலத்தில் நடந்த தமிழ்நாடு மாநிலப் போட்டியில் 100 மீட்டரை 11.34 வினாடிகளில் கடந்தும், 200 மீட்டரை 23.16 வினாடிகளில் வென்றும் “ஸ்பிரிண்ட் டபுள்” சாதனை படைத்தார்.

ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் 11.36 மற்றும் 23.53 வினாடிகளில் ஓடி “ஸ்பிரிண்ட் டபுள்” பட்டம் வென்றார். மேலும், தமிழ்நாடு ஸ்பிரிண்ட் ரிலே அணியிலும் தங்கம் வென்றார். 2025-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி தான் தனலட்சுமி முந்தைய இடைநீக்கத்திலிருந்து திரும்பினார். பத்து நாட்களுக்குள்ளாகவே, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் (NADA) பிடியில் மீண்டும் சிக்கினார். சங்ரூரில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் 11.55 வினாடிகளில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தேசிய ஊக்கு மருந்து எதிர்ப்பு நிறுவனம், விசாரணை நடத்தியது. இது தற்செயலான” பயன்பாடு நிரூபிக்கப்படவில்லை.
2021-ல் பாட்டியாலாவில் 4×100 மீ ரிலே போட்டியில் 43.37 வினாடிகளில் ஓடி தேசிய சாதனை படைத்த அணியில் ஒருவராக இருந்த தனலட்சுமி, மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கும் சூழலில், இன்னொரு ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.குற்றச்சாட்டை 20 நாட்களுக்குள் ஒப்புக்கொண்டால், நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான தடைக்காலத்தை ஓராண்டு குறைக்க ஒரு விதிமுறை உண்டு. ஆனால் தனலெட்சுமி குற்றத்தை ஏற்காததால், இரண்டாவது குற்றத்திற்கு எட்டு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.