மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாறுதலுக்கு 6000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா். நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருக்கும் நிலையில், வருவாய்துறை அலுவலங்களில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. நிலத்தை அளக்க வரும் சில நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .
ஆனால் வருவாய்துறை உற்பட எந்த ஒரு துறையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்க முடியும். ஆதாரத்துடன் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயணம் தடவிய நோட்டுகளை தருவார்கள். அதன்பின்னர் யார் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பணத்தை தர வேண்டும்.
அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுடன், அவருக்கு அது பணிக்காலம் முழுவதும் கறையாக தொடரும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்படி சிக்கல்கள் இருந்தும் லஞ்சம் வாங்குவதை சில அரசு ஊழியர்கள் தொடருகிறார்கள்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பிரியா. இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 சென்ட் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கிப் பதிவு செய்துள்ளார். விதிகளின்படி 30 நாட்களுக்குள் பட்டா மாறுதல் செய்திருக்க வேண்டிய நிலையில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது குறித்து மதிப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் காசிராஜனை அணுகியபோது, அவர் பட்டா மாறுதலுக்கு 6000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளதாக தெரிகிறது. முத்துப்பிரியா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னபோது, காசிராஜன் மிகவும் கறாராக நடந்து கொண்டாராம். இறுதியில் 500 ரூபாய் குறைத்துக் கொண்டு 5500 ரூபாய் தருமாறு பேரமும் பேசியிருக்கிறார். இதனையடுத்து, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கோபி கிராம நிர்வாக அலுவலர் காசிராஜனுக்கு பாடம் புகட்ட நினைத்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய ரசாயனம் தடவிய 5500 ரூபாய் நோட்டுகளை முத்துப்பிரியா வியாழக்கிழமை அலுவலகத்தில் வைத்து காசிராஜனிடம் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையிலான ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் காசிராஜனை பிடித்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.