1972 – ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதிமுக 53 ஆண்டுகள் MGR மற்றும் ஜெயலலிதா போன்ற மாபெரும் சக்திகளால் ஆட்சி செய்யப்படட கட்சி அதிமுக. ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் 16 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. தவெக 108 இடங்கலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும் மற்றும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி என்ற முறையில், அந்தக் கட்சிக்கே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். ஆனால் தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை என்ற நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிகளை சேர்ந்த கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்களில் வெற்றி பெறவேண்டும். தவெக 108 இடங்களில் வென்றுள்ளது. இதில் விஜய் வென்ற ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் மேலும் சபாநாயகருக்கு ஒரு தொகுதி . இதையடுத்து 106 சீட்கள் தவெக கைவசம் இருக்கும். கூடுதலாக 12 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் நிலையில், தமிழக அரசியலின் ‘கிங் மேக்கராக’ சிறு கட்சிகள் உருவெடுத்துள்ளன.
இந்நிலையில், 1972 – ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதிமுக 53 ஆண்டுகள் MGR மற்றும் ஜெயலலிதா போன்ற மாபெரும் சக்திகளால் ஆட்சி செய்யப்படட கட்சி அதிமுக. ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் 16 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நேரடியாக 169 இடங்களில் போட்டு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பல்வேறு அதிமுக பிரமுகர் 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 32 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சி சரிவை நோக்கி பயணிக்கிறது என்பதை நம்மால் காண முடிகிறது. இதற்கு அதிமுக தலைமையின் மீது மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம் என அதிமுகவினர் பலர் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.