மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ICC மகளிர் உலகக் கோப்பையில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 13-வது மகளிருக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானின் விளையாடும் ஆட்டங்கள் மட்டும், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற மற்ற போட்டிகள் நவி மும்பை, குவாகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூர் ஆகிய இந்தியாவின் 4 இடங்களில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.
அதன்படி, இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் என 8 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 30-ந் தேதி குவாகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில், 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

அதன்பின்னர் நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெல்ல பின்னர், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிடம் தலா 3 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்திடம் இறுதி வரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிற்கு தோல்வி வை தழுவ இந்தியா அரைஇறுதிக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே உலகக்கோப்பை கனவு என்ற வாழ்வா? சாவா? என்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 4-வது அணியாக அரைஇறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 29-ந் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அடுத்து அக்டோபர் 30-ந் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியனும் பலம் வாய்ந்த அணியுமான ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 338 ரன்களை எட்டி பிடித்த இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளும் இதுவரை உலகக்கோப்பையை கைப்பற்றாத நிலையில் புதிய சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிபோட்டி மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டி மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர். 17.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து நிலையில் க்ளோ ட்ரையன் பந்து வீச்சில் ஸ்மிருதி மந்தனா 58 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஷெஃபாலி வர்மாவுடன் இணைய தென் ஆப்பிரிக்கா பந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க மெல்ல மெல்ல இந்திய அணியின் ரன்ரேட் உயர்ந்தது. 27.5 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து நிலையில் அயபோங்கா காக்கா பந்து வீச்சில் ஷெஃபாலி வர்மா 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸியுடன் இணைய 29.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தீப்தி சர்மா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் இணைய 38.6 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் 29 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அமன்ஜோத் கவுர் மற்றும் தீப்தி சர்மாவுடன் இணைய 43.1 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து நிலையில் அமன்ஜோத் கவுர் 14 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி சர்மாவுடன் இணைய 48.6 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்து நிலையில் ரிச்சா கோஷ் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராதா யாதவ் மற்றும் தீப்தி சர்மாவுடன் இணைய சிறப்பாக ஆடிய தீப்தி சர்மா 58 பந்துகளில் 58 ரன் எடுத்து இன்னிங்சின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். 50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்தது.

299 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடினர். 9.3 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து நிலையில் டாஸ்மின் பிரிட்ஸ் 35 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 23 ரன்கள் என்ற நிலையில் அமன்ஜோத் கவுர் ரன் அவுட் ஆக்கினார். அடுத்து களமிறங்கிய அன்னெக் போஷ் மற்றும் லாரா வால்வார்ட்வுடன் இணைய 11.5 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்து நிலையில் நல்லபுரெட்டி ஸ்ரீ சரணி பந்து வீச்சில் அன்னெக் போஷ் 6 பந்துகளில் ரன் ஏதுமில்லாமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுனே லூஸ் மற்றும் லாரா வால்வார்ட்வுடன் இணைய 20.2 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து நிலையில் சுனே லூஸ் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அன்னெக் போஷ் மற்றும் லாரா வால்வார்ட்வுடன் இணைய 11.5 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்து நிலையில் நல்லபுரெட்டி ஸ்ரீ சரணி பந்து வீச்சில் அன்னெக் போஷ் 6 பந்துகளில் ரன் ஏதுமில்லாமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுனே லூஸ் மற்றும் லாரா வால்வார்ட்வுடன் இணைய 20.2 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து நிலையில் ஷெஃபாலி வர்மா பந்து வீச்சில் சுனே லூஸ் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மரிசான் கேப் மற்றும் லாரா வால்வார்ட்வுடன் இணைய 22.1 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து நிலையில் ஷெஃபாலி வர்மா பந்து வீச்சில்மரிசான் கேப் 5 பந்துகளில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சினாலோ ஜஃப்தா மற்றும் லாரா வால்வார்ட்வுடன் இணைய 29.3 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து நிலையில் ஷெஃபாலி வர்மா பந்து வீச்சில் சுனே லூஸ் 29 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அன்னெரி டெர்க்சன் மற்றும் லாரா வால்வார்ட்வுடன் இணைந்து தென் ஆப்பிரிக்கா அணியை சரிவில் இருந்து மீட்ட போது 39.3 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து நிலையில் தீப்தி சர்மா பந்து அன்னெரி டெர்க்சன் 37 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 35 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் நங்கூரமாக நிலைத்து நின்ற லாரா வால்வார்ட்வுடன் க்ளோ ட்ரையன் இணைந்து தென் ஆப்பிரிக்கா அணியை சரிவில் இருந்து மீட்ட போது 41.1 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்து நிலையில் தீப்தி சர்மா பந்து லாரா வால்வார்ட் 98 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய நாடின் டி கிளார்க் மற்றும் க்ளோ ட்ரையனுடன் இணைய 41.4 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து நிலையில் தீப்தி சர்மா பந்து க்ளோ ட்ரையன் 8 பந்துகளில் 1பவுண்டரி உட்பட 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, தென் ஆப்ரிக்கா அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை எடுத்தது. இதனால், இந்தியா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.