தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வலது மற்றும் இடது கை என எல்லாமுமாக இருந்து சசிகலா நடராஜன் எந்த ஒரு பெரிய அரசாங்க பதவி மற்றும் அரசியல் பதவியிலும் இல்லாமல் ஒரு தனி நபர் அரசியல் மற்றும் கட்சி ரீதியாக அதிகாரம் மற்றும் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர் தான் சசிகலா நடராஜன்.
இந்நிலையில், நடைபெற விருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கி திமுக கூட்டணி கட்சிகள் முனைப்பில் இருக்க, மறுபுறம் இழந்த ஆட்சியை கைப்பற்ற அதிமுக கூட்டணி கட்சிகள் மும்முரம் காட்டிக் கொண்டுள்ளன. இவர்களுக்கு மத்தியில் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்த்து 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் களம் காண்கின்றார்.
ஆனால், அரசாங்க பதவி மற்றும் அரசியல் பதவியிலும் இல்லாமல் ஒரு தனி நபரான சசிகலா நடராஜன் பங்கு 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மையாகும். தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் திருத்துறைப்பூண்டியில் சி.விவேகானந்தம் மற்றும் வி.கிருஷ்ணவேணி தம்பதியருக்கு கடந்த 1954-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி சசிகலா ஐந்தாவது குழந்தையாக பிறந்தார். சசிகலா 1973-இல் மக்கள் தொடர்பாளர் என்ற அரசுப்பதவியில் இருந்தவரும் திமுக கட்சியைச் சேர்ந்தவருமான நடராசனுடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திருமணம் நடத்தி வைத்தார்.

அதிமுக மற்றும் ஆட்சியையும் 1973 முதல் 1980-வரை தனிக்காட்டு ராஜாவைப்போல் நடத்திச் சென்ற ‘எம்.ஜி.ஆருக்கு 1982-ல் ஜெயலலிதா கட்சிக்குள் வந்தது எம்ஜிஆரின் இரண்டு கரங்களாகத் திகழ்ந்த சீனியர்கள் மத்தியில் ஏட்டிக்குப் போட்டிகள் தலைதூக்கின எம்.ஜி.ஆரின் நிம்மதி தொலையத் தொடங்கியது; கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும்; பத்திரிகைகள் பரபரப்பாகும்; இந்தச் சலசலப்புக்கும் பரபரப்புக்கும் காரணம் யார்? என்று தொண்டர்கள் ஆர்வமாகத் தேடுவார்கள். அனைத்துக்கும் காரணகர்த்தா, ஜெயலலிதா தான் என்று காட்சி படுத்தும் அளவிற்கு ஜெயலலிதாவை அப்படி வழிநடத்தியவர் சசிகலா நடராஜன்.
அதிமுகவில் ‘நம்பர் ஒன்’ எம்.ஜி.ஆர் மட்டும்தான் மற்றவர்கள் பூஜ்யம் “இத்தனை பூஜ்ஜியங்களை வைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆரால் ஆட்சியைப் பிடித்து, பூஜ்ஜியங்களுக்கும் ராஜ்ஜியத்தில் பொறுப்பு கொடுத்து, வெற்றிகரமாக அதைக் கொண்டு செலுத்த முடிகிறது என்றால், அது தன்னால் முடியாதா?” என்று சாதாரண கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அப்போதே முதலமைச்சர் கனவு வந்திருந்தது. ஜெயலலிதாவின் கண்களுக்குள், குடியேறி இருந்த இந்தச் சந்தேகக் கனவைக் கலைத்துவிடாமல், கண்களை எரிக்கும் லட்சிய வெறியாக சசிகலா நடராஜன் வளர்தெடுத்தார்.

மேலும், அன்றைய அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜனார்த்தனன் சார்பில், ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வேறு சில வேலைகளால், அந்த கூட்டத்தில் ஜனார்த்தனன் கலந்து கொள்ளவில்லை. ஆனால், “கட்சிக்காரர்கள் கஷ்டப்பட்டு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். அதில் போய் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் அவர்கள் மனம் புண்படும். அது கட்சியை பலவீனப்படுத்தும்.
ஆகவே, அந்தக்கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, அந்த நோட்டீஸ் விவகாரத்தை எல்லாப் பத்திரிகைகளுக்கும் கொண்டு சேர்த்தார் சசிகலா நடராஜன். இதனால், “கட்சியில், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் எல்லாம் சும்மாதான்… கட்சியில் உள்ள பெரும்பகுதி தொண்டர்களின் பார்வையை, ஜெயலலிதாவின் மேல் திரும்ப வைத்தது. இனி எல்லாம் அம்மாதான்” என்று சசிகலா நடராஜன் மாற்றியமைத்தார்.
1987 டிசம்பர் 22-ம் தேதி சென்னை கத்திப்பாராவில் அமைக்கப்பட்ட நேரு சிலை திறப்பு விழாவில் ராஜீவ் காந்தி-சோனியா காந்தியோடு வந்து எம்.ஜி.ஆருடன் கலந்து கொண்டார்; மேலும் ராஜீவ் காந்தியை வழியனுப்பி வைத்த எம்.ஜி.ஆர் இனி ஜெயலலிதாவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டியதுதான் என்ற முடிவெடுத்து நிம்மதியாக ராமவாரம் திரும்பினார். ஜெயலலிதாவின் அரசியல் அத்தியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம் மறுநாள், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிக மோசமாக இரவு நெஞ்சுவலி ஏற்பட 23-ந் தேதி இரவு 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் உயிர் பிரிந்தது.
24-ம் தேதி அதிகாலை எம்.ஜி.ஆர் உயிர் பிரிந்த தகவல் ஜெயலலிதாவுக்குப் போய்ச் சேர உடனே, கறுப்புச் சேலை அணிந்துகொண்டு தனது காரில், ராமவரம் ஜெயலலிதா கிளம்ப ஜெயலலிதாவோடு இன்னொரு பெண்ணும் அந்தக் காரில் அமர்ந்திருந்தார். 36 மணிநேரம் ஜெயலலிதாவைத் தனியாகவிட்டுவிட்டு அந்தப் பெண்ணும் நகரவில்லை. எம்.ஜி.ஆர் மறைவில், ஜெயலலிதாவுக்குப் பின்னால் நின்று கொண்டு, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியானர்; மேலும் ஜெயலலிதாவின் குரு எம்.ஜி.ஆரைப் போலவே ‘நம்பர் ஒன்’ஜெயலலிதா மட்டும்தான் மற்றவர்கள் பூஜ்யம் பூஜ்ஜியங்களுக்கும் ராஜ்ஜியத்தில் பொறுப்பு கொடுத்து ஜெயலலிதாவின் ஆட்சிக்கு 30 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவின் பின்னால் இருந்து, எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை சசிகலா நடராஜன் நகர்த்திக்கொண்டு இருந்தார்.
மறுபுறம் 1991-ல் ஜெயலலிதா முதல் முறை முதலமைச்சராக பதவி ஏற்றத்தில் இருந்தே கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் ஜெயலலிதாவின் நிழலாக மாறிய சசிகலா தொண்டர்களுக்கு சின்னம்மாவாகவும் மாறினார். 1996-ல் அதிமுக ஆட்சி பறி போனதற்கு பல்வேறு ஊழல் வழக்குகளில் தோழிகள் இருவரும் சேர்ந்தே விசாரணை மற்றும் சிறைவாசத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. 2016-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியை கட்டுப்பாட்டில் சசிகலா எடுக்க நினைத்தார்.
ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டு 4 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார். பின் எடப்பாடி பழனிசாமியை நம்பி சிறைக்கு சென்றார். ஆனால், MGR மற்றும் ஜெயலலிதாவுடன் 45 ஆண்டுகள் திரை மறைவில் மெல்லமெல்ல நகர்த்திய அரசியல் நகர்வுகளை யாரெல்லாம் பூஜ்யம் என்ன நினைத்தாரோ அவர்களின் துரோக வலையில் சசிகலா வீழ்த்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து துரோகளுக்கு அவர்களை அவர்களின் வழியிலேயே பாடம் புகட்ட திட்டம் திட்டினார். அதன் பின் ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு, தினகரனின் அமமுக என பல திருப்பங்களை சசிகலா சந்தித்தார். சிறைவாசம் முடிந்து 2021 ஜனவரியில் வெளியே வந்தவுடன் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனக்கான அரசியல் சூழல் சரியில்லாததால் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தினார்.
தற்போது ஆட்சியில் இல்லாத நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமையை நோக்கி பல பிரச்சனைகள் ஓபிஎஸ் எடுக்க, கட்சிக்காக சின்னம்மா மற்றும் தினகரன் உழைத்து இருக்கின்றனர் என்று முன்னெடுக்க கூறி இருக்கிறார். மேலும் பிரச்சனைகளை மறந்து இபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் தன்னோடு இணைய முன்வர வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்.
கடந்த காலங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக – அண்ணாமலை இடையே கருத்து மோதல் அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட “2024 -ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மட்டுமல்ல, 2026 -ஆம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக முடிவெடுத்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய முடிவில் இருந்து மாற்றிக்கொள்வார் என்ற கோணத்தில் யோசித்த சசிகலா, பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரை பாஜகவுடன் கூட்டணி செல்லவைத்து எடப்பாடி பழனிசாமி தனிமை படுத்தினார்.

அதன் விளைவு அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து 2024 -ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் களம் காண தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி நாற்பதும் வெற்றிபெற மட்டுமல்ல, அதிமுக-விற்கு பாடம் புகட்டப்பட்டது. இதன்விளைவு 2026 -ஆம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணி வீழ்த்த பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மேலும் தங்களது கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்பதையும் மீண்டும், மீண்டும் விஜய் பிரச்சாரம் செய்து வந்ததால் தவெகவை வளைத்து போட்டால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு கண்டார்.
ஓ..ஓ.. கதை அப்படி போகுதா? என்று யூகித்த சசிகலா, கொங்கு மண்டலத்தில் இருந்த செங்கோடையனை வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கெடு விதித்தார். இதனைத் தொடர்ந்து, “அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், எம்எல்ஏ பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் ” என எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வைத்தார்.
அதன் பின்னர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களை தவெகவில் இணைய வைத்து மட்டுமல்லாமல் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரை தவெக கூட்டணி செல்லவைக்கும் முயற்சிகளை சசிகலா மேற்கொண்டு என்பதே நிதர்சனமான உண்மை. இதன் பின்னணி 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுகவைக் காக்க ஆல்ரெடி சசிகலா “மூவ் ஆன்” செய்துள்ளார். ஆனால் இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.