இந்தியா- சீனா என இரு நாடுகளையும் இணைவது காலத்தின் கட்டாயம் 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் தான் எங்களை இணைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகள் 2022 மார்ச் மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டிக்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்தது. இதில் ஒரு பகுதியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவூதி அரேபியாவுக்கு அடுத்த பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. ஆகையால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்தால் ரஷ்யாவின் பெருளாதாரம் பெரிதும் பாதிக்கும் என பெரிய கணக்கை அமெரிக்கா திட்டம் திட்டியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் தருவதாக ரஷ்யா அறிவித்தது.

மேலும் இந்தியா அதன் எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் (ரஷ்யாவிடமிருந்து 2 முதல் 3 சதவீதம் அளவிலே இறக்குமதி செய்து வந்த நிலையில்). ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டு வந்தது. அப்போது, வெள்ளை மாளிகையில் இருந்து, ‘ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது என்பது அமெரிக்காவின் தடையை மீறுவதாகாது. ஆனால், அந்த வர்த்தகத்தின் காரணமாக,ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தவறான தரப்போடு நின்றதாக வரலாற்றில் நினைவு கூரப்படும்’ என்று தெரிவித்து இருந்த, நிலையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அரசியாலாக்காதீர்கள் என்று இந்தியா தெரிவித்தது.

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியா உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமல்லாமல் இன்று ஏற்றுமதிக்காகவும் பெறப்படுகிறது. இந்த கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு செய்யப்பட்டு பல ஐரோப்பிய, ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக படிப்படியாக தற்போது இந்தியா 35 சதவிகிம் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து வாங்கி வருகிறது.
அப்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்தபோது ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை வழங்க முன் வந்தது. அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு மத்தியில் இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருவதை அப்போதைய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்து பதவியேற்ற டோனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு தொடர்ச்சியாக வரி விதித்து வருகின்றார்.

அப்போது, இந்தியா உடனான வர்த்தகப் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதற்காகவும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாகவும் தனித்தனியாக 25% வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் ஜவுளி, தோல், இறால், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர துறைகளில் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.
இத்தகைய சூழலில் இந்திய வணிகர்கள் மீதான வரிகளின் தாக்கத்திற்கு மத்தியில் சிறுவணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார். அதாவது உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் எனக் கூறுவது எலி யானையை அடிப்பது போன்றது. இது நடக்காது என்ற தொனியில் பிரிட்டன், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த சிறப்பு திட்டம் ஒன்றையும் இந்தியா அறிவித்துள்ளது.
இந்நிலையில், 2018 -ஆம் ஆண்டு சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு மோடி சீனா சென்ற நிலையில் 2020 கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகள் இடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டு மோதல் நடந்தது. இதையடுத்து இருநாடுகள் இடையேயான உறவு மோசமானது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நரேந்திர மோடி முதல் முதலாக சீனா சென்றுள்ளார்.
இந்நிலையில், தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மநாட்டுக்காக நரேந்திர மோடி நேற்று ஜப்பானில் இருந்து சீனா சென்றார். சீனா சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை வரை நரேந்திர மோடி அங்கு இருப்பார். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் நிகழ்ச்சியாக நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இது இருநாடுகளின் உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இருநாடுகள் இடையேயான எல்லை பிரச்சனைக்கு தீர்வு கண்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் இருவரும் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின்போது நரேந்திர மோடி பேசும்போது, ‛ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு தலைமையேற்று இருக்கும் சீனாவுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். சீனாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததற்கும், இன்றைய சந்திப்புக்கும் நன்றி கூறுகிறேன். கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசானில் நடந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையேயான. உறவில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கியது.
இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எல்லையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லை மேலாண்மை தொடர்பாக எங்கள் சிறப்பு பிரதிநிதிகளிடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதேபோல் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளையும் சேர்ந்த 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் தான் எங்களின் ஒத்துழைப்பை இணைத்துள்ளது. இது மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை அடிப்படையில் எங்கள் உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்