வேலூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதேபோல திருச்சி எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளரான கர்ப்பிணி பெண்ணை தாக்கிய புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் பயணித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வேலூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதேபோல திருச்சி கூட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருச்சி எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளரான கர்ப்பிணி பெண்ணை தாக்கிய புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸையும், ஊழியர்களையும் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம குறித்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பேசுகையில்,வண்டியை தாக்கி சேதாரம் செய்து, என்னையும் தாக்கிவிட்டனர். என்னுடன் தொழில்நுட்ப உதவியாளரையும் தாக்கினர்.

இதில் எனக்கு நெஞ்சுவலி, கைவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளேன். எங்கள் தொழில்நுட்ப உதவியாளர் பெண். அவர் அணிந்திருந்த சால், கோர்ட் ஆகியவற்றை பிடித்து இழுத்துள்ளனர். அவர் கர்ப்பமாக உள்ளார். இவர்கள் தாக்கியதில் அவருக்கு கழுத்து, தோள்பட்டை வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காப்பாற்ற சென்ற எங்களுக்கே இந்த நிலைமை என்றால் பொது மக்களுக்கு என்ன நிலை என்று தெரியவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்தார்.