கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி அத்திபாளையம் ரோடு ஐடி பார்க் பின்புறம் பகுதியில் வழிப்போக்கர்கள் குப்பைகளை சாலையிலேயே கொட்டி செல்வதால், இப்பகுதி குப்பை மேடு போல் காட்சி அளிக்கிறது. 10 நாட்களுக்கு முன்பு இது குறித்து கீரணத்தம் பஞ்சாயத்தில் புகார் தெரிவித்த பொழுது, இது எங்கள் எல்லையில் வராது என்று அதிகாரிகள் கூறிய நிலையில், சரவணம்பட்டி மாநகராட்சியிலும் புகார் அளிக்க சென்று இருந்தோம்.
அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் அங்கு இருக்கும் நிர்வாகிகளிடம் தெரிவித்து வந்தோம். நாளை வந்து பார்க்கிறோம் என்று கூறிய நிலையில் யாரும் இதுவரை இந்த இடத்தை கண்டு கொள்ளவில்லை. தினம்தோறும் குப்பைகளை இங்கே கொட்டி செல்வதால் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது அதுமட்டுமின்றி சுகாதாரம் சீர்கேடு ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.