கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவிலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ருபாய் 3.15 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் வரிசை தடுப்பு திறப்பு விழா காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அது சமயம், ஆனைமலை மாசாணி அம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலை துறையின் அலுவலர்களும், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செயல் அலுவலர் அவர்களும், ஆனைமலை பேரூராட்சி தலைவர். கலைச்செல்வி சாந்தலிங்க குமார் அவர்களும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஆனைமலை வடக்கு ஒன்றிய செயலாளர் ஹிமாலயா யுவராஜ், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர். டி. யுவராஜ், ஆனைமலை சேனாதிபதி, ஆனைமலை நகர செயலாளர் செந்தில் குமார், உடைகுளம் பேரூராட்சி தலைவர்.ரேணுகா மோகன்குமார் மற்றும் திமுக.உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.