அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 9:30 மணி அளவில் இறை வணக்கம் கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 9:30 மணி அளவில் இறை வணக்கம் கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில், 568 மாணவ, மாணவிகள், 20 ஆசிரியர்கள் மற்றும் 7 பெற்றோர்கள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .இதனை தொடர்ந்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.