கோயம்புத்தூர் மாவட்டம் இடைய பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த இன்ஸ்டா புகழ் வைஷ்ணவி முத்தமிழறிஞர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞருக்கு வைஷ்ணவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவுநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா சாலையில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து வைஷ்ணவி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையிலும் சம உரிமை, சம வாய்ப்பு, மற்றும் சமதர்மம் நிலவ வேண்டும். எல்லா மக்களும் தங்கள் விருப்பப்படி வளர்ச்சி அடைய முழுமையான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதே ஒரு நவீன சமூகத்தின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.”
இந்த உயரிய நோக்கத்தையே தம் வாழ்நாள் முழுவதும் தமிழர் நலனுக்காகவே அர்ப்பணித்த தலைவர் கலைஞர் அவர்கள். சமூகநீதி, சம வாய்ப்பு என்கிற கொள்கையில் தடையாக நிற்கும் அனைத்து இடையூறுகளையும் அகற்றும் போராட்டத்தில் அவர் வெற்றி கண்டார்.அத்தகைய உன்னத அரசியல் தலைவரான, சமூக நலனுக்காக தன்னலம் பாராமல் செயல்பட்ட பெருந்தலைவரின் நினைவை இன்று நாம் பெருமிதத்துடனும், பணிவுடனும் வணங்குவோம் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.