கடலூரில் கணவர் வேறொரு பெண்ணுடன் உல்லாசம் இருந்ததை பார்த்து வீட்டை பூட்டி கையும் களவுமாக பிடித்த மனைவி தரமான சம்பவம் செய்து பெரும் பரபரப்பை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராமசாமி நகரை சேர்ந்த கலைச்செல்வி பொறியியல் பட்டதாரியானா இவரும் வஉசி நகரை சேர்ந்த லோகநாதன் என்பவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் வரதட்சணையாக 43 சவரன் தங்கநகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், பீரோ கட்டில், வாஷிங்மெஷின், உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து திருமணம் செய்து கொண்டார்.

கலைச்செல்வி மற்றும் லோகநாதன் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இருவருக்கும் கருத்துவேறுபடுகாரணமாக பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் வரதட்சணையாக பணம் நகை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கலைச்செல்வி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். மேலும் இந்த தம்பதி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஜீவனாம்சம் கேட்டு சென்னை உயிர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளர்.
இந்நிலையில் மனைவி கலைச்செல்வியை விவாகரத்து செய்யாமல் வேறுஒரு பெண்ணுடன் லோகநாதன் புதுப்பேட்டையில் தனிகுடித்தினம் நடத்திவந்து உள்ளர். இது பற்றி அறிந்த மனைவி கலைச்செல்வி புதுப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து கூச்சல்லிட்டு வீட்டுக்கு பூட்டுபோட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி அறிந்த புதுப்பேட்டை காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று கலைச்செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . பின்னர் பூட்டை திறந்து லோகநாதனை வெளிய வரவைத்தனர் . அப்போது லோகநாதனுடன் விட்டுக்குள் இருந்த பெண்ணுக்கும் மனைவி கலைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. தங்கள் லிவிங் டுகெதராக வாழ்வதாக அந்த பெண் கூறியதால் தகராறு மேலும் முற்றியதை தொடர்ந்து இருவரையும் காவல்துறை சமாதானம் செய்து வைத்தனர். ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதராக இருந்த கணவனை மனைவி கையும் களவுமாக பிடித்து வீட்டை பூட்டிவிட்டு சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.