பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பல மொழிசிக்கு ஏற்ப தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 100க்கு மேற்பட்ட சொகுசு கார்களை திருடிய திருடனை கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கைது செய்துள்ளது.
சென்னை அண்ணாநகர் கதிரவன் காலனி பகுதியில் வசித்து வரும் எத்திராஜ் ரத்தினம் என்பவர் கடந்த ஜூலை மாதம் கோயம்பேட்டில் உள்ள டொயோட்டா ஷோரூமில் க்ளெச் பிலேட் சர்வீஸுக்காக தன்னுடைய பார்ச்சுனர் சொகுசு காரை விட்டு இருந்தார். இந்நிலையில் ஜூன் 10-ந் தேதி அதிகாலையில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர் காரை திருடி சென்றுள்ளார். காரின் உரிமையாளர் காரை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகளுடன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளி தேடி வந்தனர். இந்நிலையில், ஒருவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக திருடினாலும், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பல மொழிசிக்கு ஏற்ப கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பாண்டிச்சேரியில் வாகனம் திருடுவதற்காக காத்திருந்த திருடனை மடக்கிப் பிடித்து சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சட்டேந்திரசிங் ஷெகாவத் என்பதும், இவருடைய தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும் ஷோரூமில் விடப்படும் கார்களை நோட்டமிட்டு சர்வீஸ் சென்டரின் உள்ளே சென்று காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி கார் எங்கு உள்ளது என்பதை கண்காணித்து யாரும் இல்லாத நேரத்தில் சொந்த மாநிலமான ராஜஸ்தான் கொண்டு சென்று அங்கிருந்து நேபால் பகுதியில் விற்பனை செய்து தெரிய வந்தது.
அதேபோல், சட்டேந்திரசிங், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 100க்கு மேற்பட்ட சொகுசு கார்களை நோட்டமிடுவதும், பின்னர் அதை நவீன கருவிகள் மூலம் லாவகமாக திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.