இந்தியாவின் மானத்தை நாற விட்டு அமெரிக்கா முழுவதுமே இந்த பெண்ணின் வீடியோ வைரலாகி 2 நாட்களாகவே பேசுபொருளாகி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் சிக்கிய நிலையில் இந்தியர்கள் மீதான திருட்டுக் குற்றச்சாட்டுகள் சமீப காலமாகவே அதிகரித்து வருவது கவலையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.

ஒரு சிலர் செய்யும் தவறுகளால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் ஹெச்-1பி விசா புதுப்பித்தல், கிரீன் கார்டு விண்ணப்பங்கள் போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர் நாடு கடத்தப்படும் அபாயமும் உள்ளது. இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும், தற்போது ஒரு பெண் திருடில் சிக்கி இந்தியாவின் மானத்தையே வாங்கி கொண்டு இருக்கிறார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் டார்கெட் என்ற சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இங்கு இந்திய பெண் அனயா அவலானி என்பவர், பொருட்களை வாங்குவதற்காக சென்று இருக்கிறார்.. கிட்டத்தட்ட 7 மணி நேரம் ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தேடி எடுத்தார். இறுதியில், 767 பொருட்களை ஒரு ட்ராலியில் வைத்து திருடி வயிற்று. பகுதியில் கட்டி வைத்துக்கொண்டு செல்ல முயன்றுள்ளார்..

ஆனால், அதற்குள் அங்கிருந்த செக்யூரிட்டிகள் இதை பார்த்துவிட்டனர்.. உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை சுற்றிவளைத்து கைது செய்து, அவர் டிராலியில் வைத்திருந்த 1,300 டாலர்கள் மதிப்புடைய பொருட்களை (1 லட்சத்துக்கு 8 ஆயிரம் ரூபாய்) பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்தியப் பெண், அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் கைதான சம்பவம் வீடியோ காவல்துறையினரின் “பாடி கேம்” வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. அந்த வீடியோவில் அப்பெண் பேசும்போது, “இந்த நாட்டை சேர்ந்தவள் கிடையாது.. நான் இங்கேயே இருக்க போவதும் கிடையாது.. ஆனால், நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன், எடுத்த பொருள்களுக்கும் பணத்தை தந்துவிடுகிறேன்” என்று அந்த பெண் காவல்துறையினரிடம் கெஞ்சுகிறார்.

அதற்கு பெண் அதிகாரி ஒருவர், “இந்தியாவில் திருடுவதற்கு அனுமதி உண்டா? என்று கேட்பது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் 2 நாட்களாக வைரலாகி இந்தியாவின் மானத்தை நாற விட்டு அமெரிக்கா முழுவதுமே இந்த பெண்ணின் வீடியோ வைரலாகிவே பேசுபொருளாகி வருகிறது.