கொரோனா காலத்தில் வீடுகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க கதவைத் தட்டிய இயக்கம் திமுக. கதவு தட்டுவதில் எங்களுக்கு கவுரவக் குறைச்சல் இல்லை என காசிமுத்து மாணிக்கம் தெரிவித்தார். சென்னை கே.கே.நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு ஏ.கே. கல்வி அறக்கட்டளை மகளிர் மேம்பாட்டு சுயநிதி உதவி குழுவின் சார்பில், திமுக செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் தலைமையில் மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் அவர்கள் 1000 குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, கலைஞர் நகர் பகுதி கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கே.கண்ணன், மு. இராசா, சென்னை தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் பா. வாசுகிபாண்டியன், ஏ.கே. கல்வி அறக்கட்டளை நிர்வாக துணை இயக்குநர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி தனசேகரன், பகுதி கழக நிர்வாகி பெ.தியாகு, வட்ட கழக செயலாளர்கள் கே. சதீஷ்கண்ணன், சோ. செந்தில்குமார், ஜம்பு முருகன், எஸ். மைக்கேல், வீ.ஏ. ராஜா, எஸ். பாஸ்கரன், ஆர். பாபு, மாவட்ட பிரதிநிதிகள் பா. தினேஷ்குமார், TSP. தென்னரசு, த. முத்துமாரியப்பன், சோழா எஸ். ரவி, எஸ். சண்முகம், வட்ட கழக துணைச் செயலாளர் அ.அசோக்குமார், மாணவர் அணி ஆர். சுதாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் காசிமுத்து மாணிக்கம் விழாவில் பேசுகையில், தமிழகத்தில் மட்டுமே அதிகம் படித்தவர்கள் கேள்வி கேட்கின்றனர். அவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் முயற்சி நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இந்தி திணிப்பு அதன்பின் நீட்தேர்வு. இந்தி படிக்காவிட்டால் கல்விக்கான நிதியை தரமாட்டோம் என்று மத்திய பாஜக அரசு கூறுகிறது.
அதை தமிழக அரசு தரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதால், அவர்கள் கனவு தோல்வியடைந்துள்ளது. இப்போது கோயில்கள் மூலம் படிக்கும் மாணவர்களின் கல்வியை தடுக்க பார்க்கின்றனர். திருப்பதி தேவஸ்தானம், குருவாயூரப்பன் கோயில் சார்பில் பள்ளி, கல்லூரிகள் நடத்தப்படுகின்றன.
முன்னாள் முதல்வர்கள் பக்தவத்சலம், MGR, ஜெயலலிதா ஆகியோர் கோயில் நிதியில் கல்லூரி கட்டவில்லையா? தமிழகத்தில்தற்போது கோயில்கள் சார்பில் 25 பள்ளிகள், 9 கலைக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி நடத்தப்பட்டு அறிவு தீபம் வளர்க்கப்பட்டு வருகிறது.
திமுகவினர் தேர்தல் வந்ததும் வீடுவீடாகச் சென்று கதவை தட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுகிறார். கொரோனா காலத்தில் வீடுகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க கதவைத் தட்டிய இயக்கம் திமுக. கதவு தட்டுவதில் எங்களுக்கு கவுரவக் குறைச்சல் இல்லை என காசிமுத்து மாணிக்கம் தெரிவித்தார்.