அரியலூர் மேற்கு அரசு பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி நாளாக கொண்டாடப்பட்டது. கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 123 -வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரியலூர் அரசு மேற்கு பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி நாளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தலைமை ஏற்கவும் சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத் தலைவர் எஸ் எம் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
மேலும் கேரியம்மாள் பூண்டி சந்தானம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மாணவர்களுக்கு தேர்வு எழுது அட்டையை வழங்கப்பட்டது. அதுபோல் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் சந்திரசேகர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜரை பற்றி சிறிது நேரம் உரையாற்றினார். விழா இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது