அஜித்குமாருக்கு நீதி கேட்டுன்னு நாடகம் ஆடுறியாடா பரதேசி..! எனக்கும் எங்க அக்காக்கும் நீதி எங்கடா போச்சு? என விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரை 2012-ஆம் ஆண்டு விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்பேரில் வளசரவாக்கம் காவல்துறை இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க விஜயலட்சுமி தனி ஒருவராக அவ்வப்போது பல வீடியோகளை வெளியிட அதற்கு சீமானும் அவருடைய ஆதரவாளர்களும் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். கடந்த ஜூலை 27-ந் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தியபோது அஜித்குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, அஜித்குமாரின் லாக்கப் மரணத்தை வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், அஜித்குமாருக்கு நீதி கேட்டுன்னு நாடகம் ஆடுறியாடா பரதேசி.. எனக்கும் எங்க அக்காக்கும் நீதி எங்கடா போச்சு? எங்க அக்காவ பாருடா paralysis ல எப்படி படுத்து கிடக்குறாங்கன்னு..” என்று விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.