10 ஓவர்களில் 97/1 ரன்கள் எடுத்து நிலையில் 60 பந்துகளுக்கு 75 ரன்கள் எடுத்தால் இந்திய வெற்றி என்ற நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் மந்தமான ஆட்டத்தால் இந்திய அணியின் கைகளில் இருந்த வெற்றியை இங்கிலாந்திடம் பறிகொடுத்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T -20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானம் நடைபெற்ற முதல் T -20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து மகளிர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்திலும், பிரிஸ்டல் உள்ள சீட் யுனிக் கிரிக்கெட் மைதானம் இரண்டாவது போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்தின் தெற்கு லண்டனின் கென்னிங்டன் உள்ள தி ஓவல் மைதானம் மூன்றாவது T -20 ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்த முறை பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து சோபியா டங்க்லி மற்றும் டேனி வயட்-ஹாட்ஜ் களமிறங்கினர். இவர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இந்நிலையில், சோபியா டங்க்லி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என T -20 வரலாற்றில் 6-வது அரைசதத்தை பூர்த்தி செய்யதார். மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் சோபியா டங்க்லி மற்றும் டேனி வயட்-ஹாட்ஜ் ஜோடியை பிரிக்கமுடியாமல் தடுமாறினார். இந்நிலையில், 13.3 ஓவரில் 124 ரன்கள் இங்கிலாந்து அணி எடுக்கையில் டேனி வயட்-ஹாட்ஜ் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என அரைசதத்தை பூர்த்தி செய்யதார்.

15.2 ஓவரில் சிறப்பாக அடிக்கக் கொண்டிருந்த சோபியா டங்க்லி 33 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உப்பட 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் அருந்ததி ரெட்டி இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வீழ்த்த இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா தல 3 விக்கெட்களையும், நல்லபுரெட்டி ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 1 விக்கெட்களையும் விக்கெட் வீழ்த்தினர்.
172 ரன்கள் என்ற இலக்கை விரட்ட இந்திய அணியின் மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பான வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஷஃபாலி வர்மா 8.6 இந்திய அணி 85 ரன்கள் எடுத்திருந்த போது 25 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உப்பட 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைய 10 ஓவர்களில் 97/1 ரன்கள் எடுத்து நிலையில் 60 பந்துகளுக்கு 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணியின் பக்கம் வெற்றி பிரகாசமாக இருந்தது. மேலும் 12.4 ஓவரில் ஸ்மிருதி மந்தனா 38 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட அரைசதத்தை பூர்த்தி செய்யதார். ஆனால் 13.1 ஓவரில் சிறப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் உப்பட 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் மற்றும் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைய 15.3 ஓவரில் மிகவும் மந்தமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 49பந்துகளில் 10 பவுண்டரிகள் உப்பட 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்தார்.
கடைசி 2 ஓவர்கள் இந்திய அணியின் கைவசம் 7 விக்கெட் 20 ரன்கள் வெற்றி என எடுக்கும்போது ரிச்சா கோஷ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் லாரன் லூயிஸ் ஃபைலர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். லாரன் பெல், இசபெல் எலினோர் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.