தி ஃபியூச்சர் ஐ சா’ என்ற காமிக் புத்தகத்தில் இன்று ஜப்பானில் பேரழிவு ஏற்படும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால் ஹாங்காங் ஏர்லைன்ஸ் ககோஷிமா மற்றும் குமாமோட்டோ உள்ளிட்ட ஜப்பானிய நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஒரு பாதை ரிங் ஆஃப் ஃபயர். இது உலகின் பெரும்பாலான செயலில் உள்ள எரிமலைகள் மற்றும் நிலநடுக்கங்கள் நடைபெறும் இடமாகும். இது நியூசிலாந்தில் இருந்து ஜப்பான் வழியாக, பெரிங் ஜலசந்தி வழியாக, வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் தென் அமெரிக்காவின் தெற்கு முனை வரை சுமார் 40,000 கிலோமீட்டர் நீளம் செல்கிறது. இந்த ரிங் ஆஃப் ஃபயர் டெக்டோனிக் தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதும் இடத்தில் அமைந்துள்ளது. ஆகையால், எரிமலைகள் மற்றும் நிலநடுக்கங்களுக்கு அடிக்கடி ஏற்பாடு சுனாமிஏற்படுவது வழக்கம்.
இதற்கிடையே இன்று அதாவது ஜூலை 5-ந் தேதி ஜப்பானை மிகப் பெரிய ஒரு சுனாமி தாக்கும் என்ற கணிப்பு இணையத்தில் பரவி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஜப்பான் செல்வதைத் தவிர்க்கும் நிலையில், அந்நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளப் பொதுமக்களிடையே எப்போதும் ஆர்வம் அதிகம். இதுபோல எதிர்காலத்தைச் சரியாகக் கணிப்போரை மக்கள் எப்போதுமே வியந்து பார்க்கின்றனர். வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது சிலருக்கு இதுபோல எதிர்காலத்தைப் பார்க்கும் பவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அப்படி ஒரு விஷயத்தால் ஜப்பானில் மிகப் பெரிய பிரளயமே நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிண்ட் செய்யப்பட்ட ஜப்பான் காமிக் புத்தகம் ஒன்றில் இருந்த தகவல்களே இதற்குக் காரணமாகும். இது ஹாங்காங், தென் கொரியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடையே ஒருவித அச்சத்தைத் தூண்டி உள்ளது. இதன் காரணமாக ஜப்பானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது.
தி ஃபியூச்சர் ஐ சா’ என்ற காமிக் புத்தகத்தில் இருந்த தகவல்களே இதற்குக் காரணமாகும். பல ஆண்டுகள் பழமையான இந்த காமிக் புக் கடந்த 2021-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது. ரியோ டாட்சுகி என்ற இந்த நபர் 2011-ல் ஏற்பட்ட பூகம்பத்தைச் சுனாமியையும், கொரோனா பேரழிவையும் முன்கூட்டியே கணித்து இருந்தார். இவரை ஜப்பானின் பாபா வாங்கா என்று கூட சிலர் அழைக்கிறார்கள். இதனால் ஜப்பான் மக்களுக்கு இதன் மேல் ஆர்வம் அதிகரித்தது.
அந்தப் புத்தகத்தில் இன்று ஜப்பானில் பேரழிவு ஏற்படும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் மிகப் பெரிய சுனாமி ஏற்படும் என்று கூறுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இது குறித்த வீடியோவே தீயாகப் பரவி வருகிறது. அதில் ஜப்பானைப் பேரழிவு தாக்கும் என்றும் ஜப்பானுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுக்கவே ஜப்பான் செல்ல வேண்டாம் எனச் சொல்லும் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இதனால் பொதுமக்கள் பலரும் தங்கள் திட்டங்களை மாற்றி அமைத்து வருகிறார்கள். இதனால் ஹாங்காங் ஏர்லைன்ஸ் ககோஷிமா மற்றும் குமாமோட்டோ உள்ளிட்ட ஜப்பானிய நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும் ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் கூட அச்சத்தில் இருக்கிறார்கள். அதேநேரம் பூகம்பம், சுனாமி போன்றவற்றை முன்கூட்டியே கணிக்க வாய்ப்பே இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக யாராலும் சொல்ல முடியாது என்றும் இதை நம்ப வேண்டாம் என்றும் ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.