பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில், வனத்துறை சார்பில், ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ந. மிருணாளினி தலைமை வகித்து, மரக்கன்று நடவு செய்தார்.
அப்போது, ந. மிருணாளினி பேசுகையில், தமிழக அரசு, காடு மற்றும் மரங்களின் பரப்பளவை, மாநிலத்தின் மொத்த பரப்பளவில், 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், ஒவ்வொரு ஆண்டும், 32 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டமான, ‘பசுமை தமிழகம் இயக்கத்தை 2022 செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகளை நடுவதன் மூலம் புவி வெப்பமடைதல் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றம் கட்டுபடுதல், நீர்வளம் பாதுகாப்பு, காடுகளின் பரப்பளவு உயர்த்துல், மண் அரிப்பு தடுத்தல், நிலத்தடி நீர்மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதன்படி, தற்போது, வேம்பு, புங்கன், நாவல், நீர்மருது, பாதாம், மகிழம் உள்ளிட்ட, 1350 மரக்கன்றுகள் நடவு மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது என ந. மிருணாளினி தெரிவித்தார்.