10-ஆம் வகுப்பு தனித் தேர்வில் ஆங்கில தேர்வின் போது தனது சித்தப்பாவிற்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு தனித் தேர்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அரிலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் எனும் கிராமத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான தனித் தேர்வு நடந்து வருகிறது. கடந்த 7 -ஆம் தேதி ஆங்கில தேர்வு நட்நதது. அப்போது மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு ஆய்வு படையினர் அந்த பள்ளிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தேர்வு எழுதிய ஒருவரின் முகமும், அவர் வைத்திருந்த ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த போட்டோவும் வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து சந்கேத்தின் பேரில் அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் ஆங்கில தேர்வை எழுத வேண்டிய நபரின் பெயர் முகமது அலி. ஆனால் தேர்வு எழுதிய நபரின் பெயர் முகமது அஸ்லாம் என்பது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி முகமது அஸ்லாமுக்கு, முகமது அலி சித்தப்பா முறையாகும். தனது சித்தப்பா முகமது அலி 10-ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் தேர்ச்சியடையவில்லை. இதனால் அவரை தேர்ச்சி ஆக்கும் வகையில் அண்ணன் மகனான முகமது அஸ்லாம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி சிக்கியது தெரியவந்தது.